ஸ்டாலின் காரை மறித்த திமுகவினர்: பெரியகுளத்தில் அடிதடி, மண்டை உடைப்பு
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் காரை மறித்தும், திமுககொடிகளை கிழித்தெறிந்தும் திமுகவின் இரண்டு கோஷ்டியினர் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபைத் தேர்தலுக்கு திமுகவினரைத் தயார்படுத்தும் பொருட்டு தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பல்வேறுகூட்டங்கள், செயல்வீரர்கள் கூட்டங்களில் பேசி வருகிறார்.முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட ஜக்கம்பட்டி என்ற இடத்தில் ஒன்றியதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு ஒன்றிய திமுகவினர் திரளாகவந்திருந்தனர்.
ஸ்டாலின் இரவு 7 மணியளவில் கூட்டம் நடக்கும் முருகன் திரையரங்கம் உள்ள பகுதிக்கு வந்தார். அப்போது திமுகவைச் சேர்ந்தஒரு கோஷ்டியினர் காரை மறித்தனர். காரில் இருந்த ஸ்டாலினை அணுகிய அவர்கள், நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்எங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை. எங்களைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று ஆவேசமாக கோஷமிட்டனர்.
அவர்களில் சிலர் திமுக பேனர்கள், கொடிகளைக் கிழித்தெறிந்தனர். தட்டிகளையும் உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காரை விட்டு இறங்கிய ஸ்டாலின் அவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றார்.
இதேபோல, பெரியகுளத்திலும் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பெரும் மோதல் ஏற்பட்டு திமுகவினர் ஒருவருடன் ஒருவர்கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டனர். இதில் திமுகவினர் 2 பேரின் மண்டை உடைந்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து சண்டையிட்ட திமுகவினரை கலைந்து போகச் செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications