வீரப்பனுக்கு உதவி: இளவரசன் காவல் நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

வீரப்பனுக்கு வெடிமருந்து சப்ளை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் படை இயக்க தலைவர்சுப.இளவரசனின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வெடிமருந்து உள்ளிட்ட பொருட்களைசப்ளை செய்து வந்ததாக கொளத்தூர் போலீசார் தமிழர் விடுதலைப் படை இயக்க தலைவர் சுப.இளவரசனை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மேட்டூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் மேட்டூர் நீதிமன்றத்தில் அஜர்படுத்துவதற்காகசுப.இளவரசனை சென்னை மத்திய சிறையில் இருந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் ஜோசப் சுப.இளவரசன் மீதான காவலை மேலும் 15 நாட்களுக்குநீட்டித்தார். வரும் 18ம் தேதி மீண்டும் அவரை ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் சுப.இளவரசன் பேசுகையில்,

என் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், இந்த வழக்கில் எனக்காக வழக்கறிஞர் நரசிம்மன் ஆஜராவதற்குஅனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துவேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+