குளத்து நீரில் வேன் கழுவியவருக்கு ஜெ. டோஸ்
Subscribe to Oneindia Tamil
திருப்போரூர்:
கேளம்பாக்கத்துக்கு அருகே ஒரு குளத்தில் வேனை கழுவிக் கொண்டிருந்தவருக்கு ஜெயலலிதா செம டோஸ் விட்டார்.முதல்வர் ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவில் இருந்து இன்று காலை தலைமை செயலகத்திற்கு புறப்பட்டார். அப்போதுகேளம்பாக்கம் சோழிங்கநல்லூர் இடையே ஒரு குளத்தில் ஒருவர் வேனை நிறுத்தி கழுவிக் கொண்டிருப்பதை பார்த்தார்.
உடனே காரை நிறுத்தி இறங்கிய ஜெயலலிதா, குடிக்கிற தண்ணீரில் இப்படி வேனைக் கழுவலாமா? குடிநீர் ஆதாரத்தை ஏன்இப்படி மாசுபடுத்துகிறீர்கள் என்று கடிந்து கொண்டார். போலீசாரிடம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார்.
இதன் பிறகு அந்த வேனை உடனடியாக போலீசார் கைப்பற்றி திருப்போரூர் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததும் எந்தப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்று முடிவு செய்யப்படும் என்று போலீசார்கூறினர்.












Click it and Unblock the Notifications