For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மீதான திடீர் வழக்கு: கரூரில் திமுகவினர் போராட்டம்- போலீஸ் தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சமீபத்திய மழை, வெள்ளத்தில் இடிந்தது தொடர்பாகதிமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டது. கட்டி, பராமரிப்பது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில்,ஈஸ்ட்கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் இந்தியா (இசிசிஐ) என்ற தனியார் நிறுவனம் இந்தப் பாலத்தைக் கட்டி, இயக்கி வந்தது.

சமீபத்திய கன மழை மற்றும் வெள்ளத்தால் இந்தப் பாலத்தின் அணுகு சாலை சேதமடைந்து இடிந்தது. இதனால் பாலத்தில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தை சுற்றிப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பாலம், குறுகிய காலத்தில்இடிந்து விழுந்து விட்டதால், பாலம் கட்டியதில் முறைகேடு நடந்ததா என்பது குறித்து விசாரணை நிடத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் பாலத்தை அரசே எடுத்து பராமரிக்கும் என்றும் அறிவித்த அவர் பாலத்தை சீர் செய்ய உத்தரவிட்டார். சரி செய்யப்பட்டபாலம் நேற்று முதல் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.

அதேசமயம், இசிசிஐ நிறுவனத்தின் அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பாலம் தொடர்பானபல்வேறு ஆவணங்களை நேற்று பறிமுதல் செய்தனர்.

இந் நிலையில் பாலம் தொடர்பாக அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 24ம் தேதி கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதில், கருணாநிதி, முன்னாள் திமுக அமைச்சர் கோ.சி.மணி, முன்னாள் தலைமைச் செயலாளர் நம்பியார்,நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் மாலதி, இசிசிஐ நிறுவன நிர்வாக இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் எதிரிகளாகசேர்க்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2001ம் ஆண்டு, சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் நடந்த ஊழல் தொடர்பாக கருணாநிதி, ஸ்டாலின்,கோ.சி.மணி உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை கைதும் செய்தனர்.

ஆனால், அந்த வழக்கில் இதுவரை குற்றப் பத்திரிக்கையைக் கூட தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. காரணம், அதில் ஊழல் நடந்ததற்கான ஆதரங்கள் இல்லை.

இந் நிலையில் கரூர் பால விவகாரத்தில் கருணாநிதி மீது திடீரென இப்போது வழக்குப் போட்டுள்ளார் ஜெயலலிதா.

கரூரில் போராட்டம்:

கருணாநிதி மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரி கரூர் திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தலைமையில்ஆயிரக்கணக்கான திமுகவினர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருணாநிதி மீது போடப்பட்ட பொய் வழக்கைக் கண்டித்து கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் சாலை மறியல்,ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தப்பட்டன.

கரூர் நகரில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தொகுதி திமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.ஆயிரக்கணக்கான திமுகவினர் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீஸார் அடித்தும்,குண்டுக்கட்டாகத் தூக்கியும் சென்று கைது செய்தனர். பெண்களையும் அவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்தில்ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக போராட்டத்திற்குத் தலைமை வகித்த எம்.பி. கே.சி.பழனிச்சாமி கூறுகையில், அமராவதி ஆற்றுப் பாலம் கட்டுவதுதொடர்பாக நகராட்சிக்கும், பாலத்தைக் கட்டிய நிறுவனத்திற்கும் இடையேதான் ஒப்பந்தம் போடப்பட்டது. அரசுக்கு இதில்சம்பந்தம் இல்லை. அந்த ஒப்பந்தத்தை எடுத்துப் பார்த்தால் இது தெளிவாகப் புரியும்.

இடிந்து விட்டதாகக் கூறப்பட்ட பாலத்தை இவ்வளவு விரைவில் எப்படி அவர்கள் சரி செய்தார்கள், திரும்பவும் அதைபோக்குவரத்துக்கு எப்படி திறந்து விட்டார்கள் என்பது புரியவில்லை.

கருணாநதியை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில்தான் இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா அரசின்ஆணவத்தைக் கண்டிக்கும் விதமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார் கே.சி.பழனிச்சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X