ஜெயலலிதா நாளை ஆண்டிப்பட்டி வருகை

Subscribe to Oneindia Tamil

ஆண்டிப்பட்டி:

ரூ. 158 கோடி-யில் நலத்-திட்ட பணி-களை தொ-டங்கி வைக்-க முதலமைச்சர் ஜெயலலிதா நாளை ஆண்டிப்பட்டி வருகிறார்.

நாளை ஆண்டிப்பட்டிக்கு வருகை தரும் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.33.63 கோடி மதிப்பீட்டில் 3.25 மொகவாட் திறன் உள்ளபெரியாறு-வைகை சிறுபுனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

ரூ.2.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தேனி மாவட்ட காவல் அலவலகத்தையும், ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தேனிமாவட்ட ஆயுதப்படை வளாகத்தையும் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.99.97 லட்சம் மதிப்பீட்டில் தேவதானப்பட்டி சிறப்புஊராட்சி குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கூடவே பல்வேறு அரசு நலத்திட்டங்களையும், புதியதிட்டங்களுக்கான அடிகல்களையும் நாட்டி வைத்து பேசுகிறார்.

நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஜெயமங்கலம்செல்கிறார். இதற்காக விழா மேடைக்கு அருகில் இறங்குதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் வருகையையொட்டி ஜெயமங்கலத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஓ.பன்னீர் செல்வம்மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். ஜெயலலிதாவின் வருகையையொட்டி ஆண்டிப்பட்டி நகரமே விழாக்கோலம்பூண்டுள்ளது.

ஆண்டிப்பட்டியில் தென் மண்டல ஐஜி திரிபாதி முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+