For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேஷன் மானிய ரத்துக்கு ஜெ. கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு பெருமளவில்ரத்து செய்துள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியத்தை மத்திய அரசு பெருமளவில் குறைத்துள்ளது.இதனால் அரிசி, கோதுமை போன்றவற்றின் விலை கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆதரவுடன்மத்தியில் செயல்பட்டு வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழை மக்களுக்கு எதிரானது என்பது மீண்டும்நிரூபணமாகியுள்ளது.

ஏழைகளின் மீது சுமையை ஏற்றி, ஏழைகளுக்கான சமூக பாதுகாப்பு என்கிற அம்சத்தை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.நாட்டிலேயே தமிழகத்தில் தான் ரேஷன் கடைகளில் மிகவும் குறைந்த விலையில் அதாவது கிலோ அரிசி ரூ. 3.50க்கு எனது அரசுஅளித்து வருகிறது. இது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்திய போதிலும், தமிழக அரசு தொடர்ந்து இதே விலையில் அரிசியைஏழை மக்களுக்கு அளித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மாநில அரசுகளின் மீது மேலும் நிதிச் சுமையைஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய விலை உயர்வுக்குப் பின்னரும், தமிழக அரசு கிலோ அரிசி ரூ. 3.50க்கு விற்பனை செய்தால், அரசுக்கு கூடுதலாகஆண்டுக்கு ரூ. 300 கோடி நிதிச்சுமை ஏற்படும். ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் அரிசி கொடுத்து வருவதன் மூலம்தற்போது ஆண்டுக்கு ரூ. 1200கோடி நிதிச்சுமை உள்ளது.

மத்திய அரசின் புதிய அறிவிப்பு காரணமாக இது ரூ. 1500 கோடியாக உயரும். மத்திய அரசு விலையை கடுமையாகஉயர்த்தியுள்ள போதிலும், தற்போது வழங்கப்பட்டு வரும் விலைக்கே அரிசி, விற்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

அதில் மாற்றம் இருக்காது. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்களின் சுயரூபம் தற்போதுவெளிப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பில் அவர்களுக்கும் பங்குண்டு.

தமிழகத்தில் கூடுதல் ரேஷன் கார்டுகள் விநியோகிக்க வேண்டும், அரிசி விலையைக் குறைக்க வேண்டும் என்று சந்தர்ப்பம்கிடைக்கும்போதெல்லாம் கூக்குரல் எழுப்பி வந்த திமுகவின் உண்மையான சுயரூபம், திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசின்ஏழை மக்கள் விரோத அறிவிப்பால் வெட்ட வெளிச்சமாகி, துரோகச் செயல் அம்பலமாகியுள்ளது.

இதன் மூலம் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டு தன்மையும், ஏழை மற்றும் சாதாரண மக்களின் நண்பன் போல் பாசாங்குபோட்டு வந்த நிலையும் வெளிப்பட்டுள்ளது. இந்த நிதிச்சுமை மூலம் தமிழக அரசையே நிலை குலைய வைக்க, அரசுநிர்வாகத்தையே முடக்க திமுகவினர் வழி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பெட்ரோலிய பொருட்களின் விலையை 5 முறை உயர்த்தியதை மக்கள் இன்னும் மறக்கவில்லை. டெல்லியில்செல்வாக்கு இருப்பதாக பீற்றிக் கொள்ளும் திமுக தலைமையிலான கூட்டணியின் கைங்கர்யம் பெட்ரோல் விலை உயர்விலும்உள்ளது.

இதுபோன்ற கடுமையான தாக்குதல்களை அளிக்கவா, இந்த யோக்கியர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தோம்? என்றுஏழை மக்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இதில் மிகவும் கொடுமை மற்றும் இரக்கமற்ற விஷயம் என்னவென்றால், பரம ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவைமத்திய அரசு குறைத்துள்து கொடுமையிலும் கொடுமையான விஷயம் ஆகும்.

இதுபோல ஏழைகளுக்கு தீங்கு ஏற்படக் கூடிய செயலை எந்த அரசும் செய்திருக்காது. எனவே இந்த அரிசி விலை உயர்வையும்,பரம ஏழைகளுக்கான அரிசி ஒதுக்கீட்டை குறைத்திருப்பதையும் மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்தபிரச்சினைக்காக 12 தமிழக மத்திய அமைச்சர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X