• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியலில் குதிக்குமா சிவாஜி மன்றம்?

By Staff
|

சென்னை:

அரசியலில் குதிக்கும் எண்ணம் சிவாஜி மன்றத்திற்கு இல்லை. ஒரு வேளை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால்நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம் என நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்தெரிவித்துள்ளார்.

சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவுடன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார்.அவரது கட்சி, ஜானகி அம்மாளின் தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகம் முழுவதும் போட்டியிட்டது.

ஆனால் ஒரு இடத்திலும் இந்தக் கூட்டணி வேட்பாளர்களுக்கு டெபாசிட் கிடைக்கவில்லை. அதன் பிறகு சிவாஜி அரசியலைவிட்டு ழுமையாக விலகினார். தனது இறுதிக் காலம் வரை அரசியல் பக்கமே சிவாஜி கணேசன் திரும்பிப் பார்க்கவில்லை.அவரது ரசிகர் மன்றம் அரசியல் தொடர்புகளைத் துண்டித்து விட்டது.

இந்தச் சூழ்நிலையில், அகில இந்திய சிவாஜி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் படு விமரிசையாக நடந்தது.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.

இதுவரை இல்லாத அளவுக்கு படு உற்சாகமாக மன்றத்தினர் காணப்பட்டதாலும், அதிக அளவில் கூட்டம் வந்திருந்ததாலும்சிவாஜி மன்றம் மீண்டும் அரசியல் பக்கம் தலை காட்டப் போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தக் கேள்வியை செய்தியாளர்கள் ராம்குமாரிடமே கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், சிவாஜி மன்றம் இதுவரைஎந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நிடுநிலையுடன் உள்ளது. இதனால் தான் எந்தப் பிரச்சினையும் இல்லை.

வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் சிவாஜி மன்றத்துக்கு இல்லை. ஒருவேளை அப்படி ஒரு எண்ணம்வந்தால், மன்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். நடிகர் திலகத்திற்கு சென்னையில் மணி மண்டபம் கட்டுவதில்எந்தச் சிக்கலும் இல்லை.

பூமி பூஜையோடு அது நிற்கிறது. மணி மண்டபத்தைக் கட்டுவதற்கு ரூ. 1 கோடி வரையிலும் தர சிவாஜி மன்றம், சிவாஜிகணேசனின் குடும்பம் தயாராக உள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கும் என நம்புகிறேன்.

புதுச்சேரியில் சிவாஜி கணேசனின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசுக்கு பாராட்டுக்களையும், நன்றியையும்தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல சென்னையில் சிவாஜி கணேசன் வாழ்ந்த வீடு உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலைஅல்லது பனகல் பூங்கா எதிரே சிவாஜியின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிவாஜியின் சிலையை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தஞ்சாவூரில் சிவாஜி-பிரபு அறக்கட்டளை சார்பில் மகளிர் கல்லூரி ஒன்றைத்தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இது எனது தாயாரின் விருப்பம். இந்தக் கல்லூரியில், சிவாஜி மன்ற நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமைவழங்கப்படும் என்றார் ராம்குமார். முன்னதாக சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் நின்று விட்டதென்னிந்திய நடிகர் சங்கம், உடனடியாக மண்டபம் கட்டும் பணியைத் தொடங்க வேண்டும் என்று கோரி கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

மேலும், மழை, வெள்ள நிவாரணப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழக அரசைப் பாராட்டியும் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த சந்திரமுகி படம் மிகப் பெரும் வெற்றியைப்பெற்ற சந்தோஷம், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் முகங்களில் பிரதிபலித்தது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X