பக்ரீத்: தமிழகத்திற்கு வந்த 68 ஒட்டகங்கள்
சென்னை:
பக்ரீத் பண்டிகையன்று பலி கொடுப்பதற்காக ஹைதராபாத்திலிருந்து 68 ஒட்டகங்களை தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம்கொண்டு வந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையன்று பலி கொடுப்பதற்காக ஹைதராபாத்திலிருந்து 68 ஒட்டகங்கள்தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் இந்த ஒட்டகங்களை கொண்டு வர ஏற்பாடுசெய்துள்ளது.
சென்னை, மதுரை, ஏர்வாடி, இளையாங்குடி, தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு இந்த ஒட்டகங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஏழை முஸ்லீம்களுக்கு இந்த ஒட்டகங்களின் இறைச்சி பிரித்து வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தலாகால் கிலோ இறைச்சி வழங்கப்படும்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதிக்கு 8 வயது ஒட்டகம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன் எடை 700 கிலோஆகும். ஒட்டகங்களை பலியிடுவது குறித்து தமுமுக பிரமுகர் ஒருவர் கூறுகையில்,
சட்டப்படி 5 வயதுக்கு மேற்பட்ட ஒட்டகங்களைப் பலி கொடுக்கலாம். அதன் அடிப்படையில் தற்போது தமுமுக ஏற்பாட்டின்பேரில் 5 வயதுக்கு மேற்பட்ட ஒட்டகங்களை ஹைதராபாத்திலிருந்து கொண்டு வந்துள்ளோம். இந்த ஒட்டக இறைச்சிஏழைகளுக்கு வழங்கப்படும் என்றார்.
| ||||
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |