இந்த சுவர் எனக்கு... இது எனக்கே எனக்கு..

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தல் ஜூரம் அரசியல் கட்சிகளைத் தாக்க ஆரம்பித்து விட்டது. இப்போதே விளம்பரம் செய்வதற்காக சுவர்களைப்பிடிக்க கட்சிகளிடையே போட்டி ஆரம்பித்து விட்டது.

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்படக் கூடும் என தெரிகிறது. தேர்தலுக்கான பூர்வாங்கவேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க மும்முரமாகியுள்ளன.

திமுக கூட்டணியைப் பொருத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கூட இருந்த கட்சிகள் இந்த முறையும் தேர்தலை சந்திக்கப்போகின்றன. புதிதாக ஏதாவது சில கட்சிகள் சேரக் கூடும் என கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.

பாமக, மதிமுக ஆகியவை அவ்வப்போது மிரட்டல் விட்டாலும் கூட்டணியை விட்டுப் போக மாட்டோம் என சத்தியபிரமாணம்செய்துவிட்டனவாம். இதனால் திமுக தைரியமாக இருக்கிறது.

அதிமுகவைப் பொருத்தவரை அக்கட்சி மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா அறிவித்துள்ளார். இருப்பினும் கடைசி நேரத்தில் அத்வானி, ஆர்எஎஸ்எஸ் தலையிட்டு பாஜகவை அதிமுக கூட்டணிபஸ்சில் ஏற்றிவிடுவார்கள் என்று தெரிகிறது.

கண்டக்டர் சீட்டுக்குப் பக்கத்தில் ஓரமாய், ஒன்று இரண்டு சீட் கிடைத்தாலும் போதும் என்ற நிலையில் பாஜக உள்ளது.

அதிமுகவில் இந்த முறை விஜய டி.ராஜேந்தருக்கும், காங்கிரஸை உடைத்துக் கொண்டு வந்தால் திண்டிவனத்துக்கும் சில சீட்டுகள்உறுதி என்கிறார்கள். ஸ்டாலின் எங்கெல்லாம் போய் திமுக செயல் வீரர்கள் கூட்டம் போடுகிறாரோ அங்கெல்லாம் டி.ராஜேந்தரைஅனுப்பச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர் ஜெயலலிதா.

வேன் செலவு, தங்கும் செலவு, கூட்டம் கூட்டும் செலவு எல்லாம் அதிமுக பார்த்துக் கொள்ளுமாம். இதனால் முடியை சிலுப்பிவிட்டுக் கொண்டு கருணாநிதியை திட்ட வசனங்களைத் தயார்படுத்தி வருகிறார் செயின் ஜெயபால்.

புதுக் கட்சி தொடங்கியுள்ள விஜயகாந்த்தின் நிலை என்ன என்று தெரியவில்லை. நான் தனித்தே போட்டியிடுவேன் என்றுபேசிவிட்டு, கருணாநிதியைத் தாக்குகிறார். அதே வாயால் அம்மாவைப் பாராட்டுகிறார். இதனால் எல்லோரையுமே குழப்பத்தில்வைத்திருக்கிறார்.

அதிமுக கூட்டணிக்குப் போகாவிட்டாலும் கடைசி நேரத்தில் ஏதாவது அண்டர்கிரவுண்ட் அண்டர்ஸ்டாண்டிங் போட்டுக்கொண்டு திமுக கூட்டணிக்கு, குறிப்பாக பாமகவுக்கு ஆப்பு வைக்க விஜய்காந்த் முயல்வார் என்று தெரிகிறது.

அதேசமயம், பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கார்த்திக்கும் யாருடன் சேருவார் என்பதுதெரியவில்லை. தேவர் சமூக ஓட்டுக்களை கார்த்திக் எந்த அளவுக்குப் பிரிப்பார் என்று ஆய்வு நடத்திக் கொண்டுள்ளது உளவுப்பிரிவு.

இவரால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பிரச்சனை வரும் என உளவுப் பிரிவு ஏதாவது தகவல் தந்தால், அவரைகூட்டணிக்குள் இழுத்துப் போட்டு ஒரு சீட் தந்துவிடும் அதிமுக என்கிறார்கள்.

இல்லாவிட்டால் தனித்தோ அல்லது விஜய்காந்துடன் கைகோர்த்துக் கொண்டோ தேர்தலை சந்திப்பாராம் கார்த்திக்.

இப்படி அரசியல் கூட்டணிகள் தொடர்பான யூகங்கள், வியூகங்கள் ஒருபக்கம் இருக்க, விளம்பரப் பிரசாரத்திற்காக சுவர்களைப்பிடிக்கும் முக்கியமான வேலையும் தொடங்கி விட்டது.

சென்னை நகரில் முக்கியமான சுவர்களைப் பிடித்துப் போட்டு வருகிறார்கள் அரசியல் கட்சியினர். இதில் அதிமுகதான்ன்னணியில் உள்ளது. ஜெயலலிதா அரசின் சாதனைகள், புதிய வீராணம் திட்டம், வீரப்பன் வேட்டை உள்ளிட்ட ஜெயலலிதாஅரசின் சாதனைகளை விளக்கி சுவர்களில் விளம்பரம் செய்து வருகிறார்கள்.

ஆளுங்கட்சி என்பதால் சுவர்களைப் பிடிக்க அவர்களுக்கு பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை.

திமுகவும் அதிமுகவுக்கு சற்றும் இளைத்த கட்சியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரதுபிரமாண்ட படங்களுடன் சுவர் விளம்பரங்களில் தீவிரம் காட்டி வருகிறது.

விஜயகாந்த் கட்சியினரும் சுவர்களைப் பிடித்து விளம்பரம் எழுதத் தொடங்கியுள்ளனர். இவர்களைத் தவிர மற்ற கட்சியினர்மத்தியில் சுவர்களைப் பிடிக்கும் தீவிரம் அதிகம் இல்லாவிடடாலும் கூட ஆங்காங்கே அவர்களும் சுவர்களைப் புக் செய்துவருகின்றனர். இவர்களில் பாமக மட்டுமே பிரதானமாக தெரிகிறது.

இதுதவிர அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களும் களை கட்ட ஆரம்பித்துள்ளன. இதுவரை கட்சி அலுவலகம் பக்கமேவராத பிரமுகர்கள் கூட இப்போது திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக வறண்டு கிடக்கும் காங்கிரஸ் தலைமையகமான சத்யமூர்த்தி பவனுக்கு லேட்டஸ்ட் கார்களில் கஞ்சி போட்ட கரைவேட்டி, சட்டை சகிதம் எட்டிப் பார்க்கும் காங்கிரஸ் தலைவர்களின்.. ஸாரி தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எப்படி ஜெயிப்பது என்று அரசியல் கட்சிகள் யோசனையில் ஆழ்ந்துள்ள நிலையில், திருவாளர் பொதுஜனம் இன்னொருஐந்தாண்டுத் திருவிழாவுக்கு தயாராகி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+