விமானத்தில் மாமியார்-மருமகள் சண்டை!!!!!!!

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

ரன்வேயில் ஓடிக் கொண்டிருந்த விமானத்தில் மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம்நிறுத்தப்பட்டு இருந்து அந்தக் குடும்பமே இறக்கிவிடப்பட்டது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் முலவரிக்கால் என்பவர் தனது மனைவி கோல்டி, மற்றும்குழந்தை, பெற்றோர்களுடன் அமெரிக்கா செல்ல விமான நிலையம் வந்தார். துபாய் வழியாகச் செல்லும் எமிரேட்ஸ் விமானத்தில்ஏற வந்தார்.

விமான நிலையம் வந்தபோதே அந்தக் குடும்பம் சண்டையிட்டபடி வந்தது. ஜார்ஜின் மனைவி தனது மாமனார், மாமியாரைதிட்டிக் கொண்டும் அவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டும் இருந்தார். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றஜார்ஜ், குடும்பத்தோடு விமானத்தில் ஏறினார்.

விமானத்தில் ஏறிய பிறகும் அவரின் மனைவி தனது மாமனார், மாமியாரை திட்டிக் கொண்டேயிருந்தார். மேலும் கணவர்ஜார்ஜையும் கோபத்தில் கத்தினார்.

இந் நிலையில் விமானம் ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போதும் வாயை மூடவில்லை கோல்டி. அவர் கத்த, பதிலுக்குமாமியார் கத்த என விமானம் சந்தைக் கடையானது. பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்க்க, விமான சிப்பந்திகள்செய்வதறியாது திகைத்தனர்.

இந் நிலையில் வெறுத்துப் போய் எழுந்த ஜார்ஜ், விமானத்தை நிறுத்தச் சொன்னார். இதைத் தொடர்ந்து விமானத்தை நிறுத்துமாறுவிமானிக்கு சிப்பந்திகள் தகவல் அனுப்ப, ரன்வேயில் நிறுத்தப்பட்டது விமானம்.

இதையடுத்து தானும் குடும்பத்தினரும் விமானத்தில் இருந்து இறங்குவதாகவும், படிகளை இணைக்குமாறும் ஜார்ஜ் கோரினார்.

இதையடுத்து விமானத்தின் பின் பக்கக் கதவு திறக்கப்பட்டு, அவர்கள் இறக்கிவிடப்பட்டனர்.

மாமியாரைத் திட்டியபடியே விமானத்தில் இருந்து இறங்கினார் கோல்டி.

இதைத் தொடர்ந்து அந்த விமானம் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக துபாய்க்கு புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் துபாய் சென்றடையும் வரை ஜார்ஜ் குடும்பத்தை விமான அதிகாரிகள் விமான நிலையத்திலேயே சிறைபிடித்துவைத்திருந்தனர். அப்போதும் வாய் ஓயவில்லை கோல்டிக்கு.

சும்மா தானே இருக்கிறோம் என்று கணவரையும் மாமியார், மாமனாரையும் திட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தார்.

சமையல் கட்டில் ஆரம்பித்த மாமியார்-மருமகள் சண்டை வானை எட்டிவிட்டது. புதன் கிரகத்துக்குப் போனாலும் இந்தச் சண்டைமட்டும் ஓயாது போலிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+