For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத் தீவை குத்தகைக்கு எடுக்க ஜெ கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கச்சத்தீவைஇந்திய அரசு நிரந்தர குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் வெறி தாக்குதல் நடத்துவதுஅவ்வப்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர், எண்ணற்றோர் காயமடைந்துள்ளனர்.பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்கள், படகுகள், மீன் பிடி வலைகள் பறிபோய் உள்ளன.

இலங்கைக் கடற்படையின் இந்த அட்டூழியச் செயலுக்கு முடிவு காணமுடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் பரிதவித்துவருகின்றனர். மத்திய அரசின் சார்பில் இதுவரை உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தொடர்ந்துவருகிறது இலங்கை கடற்படையின் வெறியாட்டம்.

இந் நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நேற்று வீரர்கள்துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவர் படுகாயமடைந்தார். இது ராமேஸ்வரம் பகுதிமீனவர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வங்கக் கடலில் பாக்ஜலசந்திப் பகுதியில், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால்கண்மூடித்தனமாக தாக்கப் படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

இது தொடர்பாக நான் பலமுறை உங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நேற்றும் நடந்துள்ளது.எனவே இப்பிரச்சினை தொடர்பாக தங்களுக்கு மீண்டும் கடிதம் எழுதுவதில் மிகவும் வருத்தப்படுகிறேன்.

கச்சத்தீவு அருகே இயந்திரப் படகில் சென்று 8.1.2006 அன்று காலை 8 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச்சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டனர். அத்தோடு மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், மீன்பிடிவலைகளையும் பறித்துக் கொண்டு சென்றனர்.

தாக்குதலில் ஆண்ட்ரூஸ் என்ற மீனவருக்கு துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்து காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று மீனவர்களும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆண்ட்ரூஸ் தற்போது ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மீனவர்கள் நடுக்கடலில், இலங்கை கடற்படையால் கண்மூடித்தனமாக தாக்கப்படும்மனிதாபிமானமற்ற செயலை தாங்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இப் பிரச்சினையில் அதிக கவனம் செலுத்தும்படிகேட்டுக் கொள்கிறேன்.

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துத்தான் தங்களது வயிற்றைக் கழுவுகிறார்கள். மீன்பிடி தொழில்தான்அவர்களுக்கு ஜீவாதாரமே. முன்பு இருந்ததைப் போல கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமை தமிழகமீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இப்பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர முடிவு காண முயற்சிக்க வேண்டும். கச்சத்தீவை நிரந்தரமாக குத்தகைக்கு எடுப்பதுதான்இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற யோசனையையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், இப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண இதுவே சரியானதருணம் ஆகும். எனவே மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X