முசிறி அதிமுக பெண் எம்எல்ஏவின் பண மோசடி

Subscribe to Oneindia Tamil

முசிறி:

முசிறி அதிமுக எம்.எல்.ஏ. மல்லிகா சின்னச்சாமி மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குப் பதிவாகியுள்ளது.

முசிறி அருகே உள்ள ஏவூர் பகுதியைச் சேர்ந்தவர் நீலமேகம். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப்பணியாற்றி வந்தார். இந் நிலையில் தனது பணியை நிரந்தரமாக்குவதற்காக எம்.எல்.ஏ. மல்லிகா சின்னச்சாமியை அணுகினார்நீலமேகம்.

ரூ. 1.83 லட்சம் கொடுத்தால் பணி நிரந்தரம் செய்ய உதவுவதாக எம்எல்ஏ கூறினார்.

இதையடுத்து பணத்தை மல்லிகாவிடம் தந்தார். ஆனால், பணத்தை லபக்கிய மல்லிகா, நீலமேகத்தை டீலில் விட்டார். அவருக்குபணி நிரந்தரம் ஆகவில்லை.

மாறாக அவர் வேலையை விட்டே நீக்கப்பட்டார். இதையடுத்து கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மல்லிகாவை தொடர்ந்துகேட்டு வந்தார் நீலமேகம். ஆனால் பணம் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து முசிறி நீதிமன்றத்தில் மல்லிகா சின்னச்சாமி மீது நீலமேகம் பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+