சிறுமியை கற்பழித்த பாதிரியார் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

Lakshmiகோவை அருகே அனாதை இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமியை கற்பழித்த பாதிரியார் ரயில் முன் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சென்னாமலை கரட்டு மேடு பகுதியை சேர்ந்தவர் மாராத்தாள் (வயது 35).மாராத்தாள் தனது மகள்கள் லட்சுமி (வயது 13), சித்ரா (வயது 10), மகன் ஆறுச்சாமி (வயது 5) ஆகியோருடன் தனியாகவசித்தார்.

இந் நிலைஸயில் அந்த கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் தொடங்கப்பட்டது. இதையடுத்து மாராத்தாள் தனதுகுழந்தைகளையும் அங்கு சேர்த்தார். அங்கு மாதம் ஒருமுறை சென்று தனது குழந்தைகளை பார்த்து வந்தார் மாராத்தாள்.

கடந்த நவம்பர் மாதம் தனது குழந்தைகளை பார்க்க சென்ற மாராத்தாளிடம் உனது மகள் லட்சுமி பெரியவளாகி விட்டாள்.அவளை வீட்டுக்கு அழைத்து செல் என்று விடுதியில் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட லட்சுமிக்கு இடுப்புக்கு கீழே செயல்படாமல் போனது. மேலும்புண் ஏற்பட்டு சீழ் வடியத் தொடங்கியது. அப்போது தான் லட்சுமி தனது தாயாரிடம், அனாதை விடுதியில் தங்கியிருந்த போதுதனக்கு மயக்க மாத்திரை கொடுத்து நிர்வாகி சார்லஸ் தன்னை கற்பழித்தைக் கூறினார்.

இது குறித்து மாராத்தாள் காரமடை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பாதிரியார் சார்லஸ் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பாதிரியார் சார்லஸ் தலைமறைவானார். அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கோவை ரயில் நிலையத்துக்கும், வட கோவை ரயில் நிலையத்துக்கும்இடையே பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாதிரியார்சார்லஸ் என்று தெரிய வந்தது.

உடனே இது குறித்து அந்த பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் ஷெரீப்வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சிறுமி கற்பழிப்பு புகார் கூறியதில் தலைமறைவாக இருந்த பதிரியார் இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள லட்சுமியின் உடல் நிலையும் கவலைக்கிடமாகவே உள்ளது.

சிறுமியை கற்பழித்த பாதிரியார் !

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+