நடிகை ஜெயச்சித்ரா வீட்டில் ரூ. 5 லட்சம் நகை, பணம் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
நடிகை ஜெயச்சித்ராவின் வீட்டில் ரூ. ஐந்தரை லட்சம் மதிப்புள்ள நகை, பணம், செல்போன் ஆகியவை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஜெயச்சித்ராவின் வீடு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் (ஜெயலலிதா, ரஜினி ஆகியோரின் வீடுகளும் இதே பகுதியில் தான்உள்ளது) உள்ளது. இந்த வீட்டில் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் வேலைக்காரராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வெங்கட்ராமன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்த நகை, பணத்தைஜெயச்சித்ரா குடும்பத்தினர் சோதித்து பார்த்த போது ரூ. ஐந்தரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணம், செல்போன் ஆகியவைகாணாமல் போனது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து ஜெயச்சித்ராவின் கணவர் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்துள்ளார்.இந்தப் புகாரின் பேரில் தலைமறைவாகி விட்ட வெங்கட்ராமனை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications