• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-அள்ளி தரும் ஜெ

By Staff
|

சென்னை:

மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது. இதற்காக தனிச்சட்டம் இயற்றப்படும் என்று தமிழக சட்டசபையில் இன்று ஆளுனர் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மரப்புப்படி ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர்தொடங்கியது. கூட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் படித்தார். (அரசு எழுதித் தரும்அறிக்கையை ஆளுநர் படிப்பது தான் ஆளுநர் உரையாகும்).

தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் தவிர, அரசு அமல்படுத்தி வரும் 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்தும்ஆளுநர் உரையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்து. அந்த உரையின் விவரம்:

நாட்டின் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய ஆட்சியின் கீழ் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது.

மழை, வெள்ளத்தால் தமிழகத்தின் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஜெயலலிதா அந்தப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டது பாராட்டுக்குரியது.

தமிழக அரசு கோரிய ரூ. 13,000 நிவாரண நிதிக்குப் பதிலாக இதுவரை மத்திய அரசு ரூ. 1,000 கோடியை மட்டுமேஒதுக்கியுள்ளது. விரைவில் மீத நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. ஊரகமாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்த, மன உளைச்சலைக் கொடுத்த நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அனுமதிநடைபெற்றது.

இருப்பினும் இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களின் தகுதியைநிர்ணயம் செய்ய மாநில அரசின் பாடத் திட்டமே போதுமானது. மாநில அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பயிலாதவர்களுக்கு,தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

இதுதொடர்பாக தனிச் சட்டம் இயற்றப்படும், ஊரக மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கச்சத்தீவை நிரந்தர குத்தகைக்கு எடுக்க மத்திய அரசு உடனடிநடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அரசுப் பணியாளர்களுக்கு இந்த மாதம் முதல் 4 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. தற்போதுவழங்கப்பட்டு வரும் 67 சதவீதத்திலிருந்து இது 71 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 282கோடி கூடுதலாக செலவாகும்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வித்திட்ட முதல்வர் ஜெயலலிதா, இன்று அந்த இயக்கம் ஒரு சமூகப் புரட்சி மலராகபூத்துக் குலுங்கக் காண்கிறார். தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தஇந்த அரசை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நாடாளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு விரைந்துநிறைவேற்ற வேண்டும்.

இன்று தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி பல துறைகளிலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலால்முதலீடுகளுக்கு உகந்த இடமாக உள்ளது. 20 ஆண்டுகளாக சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு வந்த காட்டுக் கொள்ளையன்வீரப்பனை வீழ்த்தியது இந்த அரசு தான்.

சுனாமியாலும் வரலாறு காணாத வெள்ளத்தாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டாலும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8சதவீதமாக உள்ளது.

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர மாநிலத்தின் திட்டம் கவலை தருகிறது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள்வறண்டுவிடும். இத் திட்டத்தை ஆந்திரம் கைவிட வேண்டும்.

ரேசன் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியத்துக்கு மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதுஏற்கத்தக்கதல்ல.

சுனாம் நிவாரணத்துக்கு மத்திய அரசு ரூ. 812 கோடி தான் வழங்கியது. மாநில அரசு ரூ. 1,136 கோடி செலவிட்டுள்ளது.

இவ்வாறு அரசைப் பராட்டித் தள்ளியிருக்கிறது ஆளுநர் உரை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X