மோனோ ரயில்: மலேசிய நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம்: கருணாநிதி
சென்னை:
சென்னை நகரில் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்படவுள்ள மோனோ ரயில் திட்டம் தொடர்பாக ஏற்கனவே மலேசியாவைச்சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் பதிலளிக்கையில், சென்னை நகரில் மோனோ ரயில் திட்டத்தை சென்னைமாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் உதவியுடன் நிறைவேற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.இந்தத் திட்டத்திற்கான டெண்டர் இப்போது தான் விடப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே மலேசியாவைச் சேர்ந்த ஒருநிறுவனத்துடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 20,000 கோடி ஆகும். அதில் ரூ.1000 கோடி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு முக்கியப்புள்ளிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தான் பிடித்த முயலுக்கு 3 கால்கள் தான் இந்த அரசு பிடிவாதமாக இருந்து, போகியன்று ஆளுநர் உரையை நிகழ்த்தி முடித்துவிட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 20ம் தேதி மாலை இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து விட்டு, மறு நாள்காலையிலேயே விவாதம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் முன், எந்தவிதக் குழப்பம் இல்லாதஅளவுக்கு, சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு, கல்வியாளர்களையும், ஆசிரியர்களையும் கலந்து பேசி கொண்டு வரவேண்டும்.
அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசு படுத்திய பாட்டினை சரிக்கட்டுவதற்காகவே, அவர்களுக்கு 4 சதவீத அக விலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications