வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பாலியல் புகார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது பெண் பைனான்சியர் ஒருவர் பாலியல் புகார் கூறி பரபரப்பைஏற்படுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் சுதாகரன். ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மீதுகேரளாவைச் சேர்ந்த பெண் பாைனன்சியர் பிரியா நாயர் என்பவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.25 வயதாகும் பிரியா நாயர் திருமணமானவர், குழந்தைகள் கிடையாது. பிரியாவும், அவரது கணவரும் சேர்ந்துதிரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார்கள். தற்போது நண்பனின் காதலி என்ற படத்தை பிரியா சொந்தமாகதயாரித்து வருகிறார்.
இவர் சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம் கொடுத்துள்ள புகாரில், நான் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வி.என்.சுதாகரனை திருவண்ணாமலையில் வைத்து சந்தித்தேன். எனது படத்தை இயக்கும் இயக்குநர் தான் சுதாகரனை அறிமுகப்படுத்திவைத்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு தினசரி இரவு 12 மணிக்கு மேல் சுதாகரன் என்னைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவார்.முதலில் சாதாரணமாக பேச ஆரம்பித்த அவர் போகப் போக ஆபாசமாகவும், அறுவெறுப்பு தரும் வகையிலும் பேசத்தொடங்கினார்.
தினசரி நள்ளிரவுக்கு மேல் பேசி செக்ஸ் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார் பொறுத்துப் பார்த்த நான் ஒரு நாள் அவர் என்னுடன்5 மணி நேரத்திற்கும் மேலாக ஆபாசமாக பேசியதை டேப் செய்து வைத்தேன். இதையடுத்து தற்போது புகார் கொடுத்துள்ளேன்.சுதாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார் குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் மூலம் விசாரிக்கச் சொல்வதாக நடராஜ் தன்னிடம் உறுதியளித்ததாக பிரியாநாயர் தெரிவித்தார்.
பிரியா நாயரின் இந்த பரபரப்புப் புகார் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications