எம்ஜிஆர் சிலைக்கு ஜெ. மாலை-மரியாதை
சென்னை:
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள தலைமைக் கழகஅலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ளஅதிமுக தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
பின்னர் விழா மலரையும் அவர் வெளியிட்டார். அதன் பின்னர் அதிமுக நிர்வாகிகள், பிரமுகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.இதே போல கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு சபாநாயகர் காளிமுத்து,அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.
தமிழகம் முழுவதும் உள்ள எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து பிறந்த நாளை கொண்டாடிவருகிறார்கள்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்:
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாகக் குறைத்ததைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக வரும் 23ம்தேதி அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக பேரவைச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதத்தை தற்போதுள்ள 9.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இது நியாயமற்ற,கண்டனத்துக்குரிய செயல்.
இந்த வட்டி விகிதக் குறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந் நிலையில் முதல்வர் அம்மாவின்ஆணைக்கிணங்க, அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில், வரும் 23ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பும், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்என்று கூறியுள்ளார் ஜக்கையன்.


Click it and Unblock the Notifications
