• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளியேற தயாராகிறது மதிமுக: திமுக திக்..திக்

By Staff
|

கோவை:

சட்டசபைத் தேர்தலில் மதிமுகவின் கெளரவம் கெடாத வகையில் தொகுதிகள் ஒதுக்கப்படாவிட்டால் திமுக அணியை விட்டுவிலகி, வேறு அணியில் சேர வேண்டிய நிலை வரும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்கூறியிருக்கிறார்.

மதிமுகவில் வைகோவின் மனசாட்சி என்று கருதப்படுபவர் நாஞ்சில் சம்பத். கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டங்களில் தான்சொல்ல விரும்பும் கருத்துக்களை இவர் மூலம் தான் வைகோ வெளிப்படுத்துவது வழக்கம். இதனால் இவரது கருத்துக்கள்பெரும்பாலும் வைகோவின் கருத்தையே பிரதிபலிக்கும்.

இந் நிலையில் அணி மாறவும் தயங்க மாட்டோம் என சம்பத் மிரட்டியிருப்பது திமுகவில் இருந்த விலக மதிமுகதயாராகிவிட்டதையே உணர்த்துகிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்ததது மதிமுக. தனக் கட்சிக்கு 21 தொகுதிகளைக் கேட்டார்வைகோ. ஆனால், 15 மேல் ஒரு சீட் கிடையாது என திமுக கூறிவிட்டதால் கடைசி நேரத்தில் கோபமடைந்து கூட்டணியை விட்டுவிலகினார் வைகோ.

தனித்துப் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்து சாதனை படைத்தது மதிமுக.

ஆனாலும் மதிமுகவினர் வாக்குகளைப் பிரித்ததால், பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர்.அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது.

இந் நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்தது மதிமுக. இப்போது வரைகூட்டணியில் மதிமுக நீடிக்கிறது.

இருப்பினும் திமுகவில் தங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை, இழிவாகவே தாங்கள் பார்க்கப்படுகிறோம் என்றஎண்ணம் மதிமுகவினர் மத்தியில் வலுவாக உள்ளது. வைகோவை சன் டிவி இருட்டடிப்பு செய்வது, பொதுக் கூட்டங்கள்,கூட்டணிக் கட்சிக் கூட்டங்களிலும் வைகோவுக்கு உரிய இடம் தரப்படாதது என பல வகைகளிலும் அதிருப்தி நிலவுகிறது.

ஆனால், இதுவரை தனது அதிருப்தியை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்த வைகோ தேர்தல் நெருங்கி வரும் நிலையில்சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் யாருக்கு எத்தனை சீட் என்ற பூர்வாஙகப் பேச்சுவார்த்தையை திமுக தலைவர் கருணாநிதி முடித்து விட்டார்என்று பேச்சு அடிபடுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன.

பாமகவுக்கு உரிய இடங்கள் தர முன் வந்துள்ள கருணாநிதி, மதிமுக விஷயத்தில் மீண்டும் கெடுபிடி காட்டுவதாகத் தெரிகிறது.

தங்களுக்கு உரிய இடங்கள் தரப்படாவிட்டால் கூட்டணியை விட்டு விலகுவோம் என்பதை மதிமுக வெளிப்படுத்தஆரம்பித்துள்ளது.

திமுக கூட்டணியை விட்டு விலக வேண்டும் என வைகோ முன்னிலையிலேயே கட்சி நிர்வாகிகள் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில் திமுகவை விட்டு விலகக் கோரி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் போட்டு அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் கோவையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்நாஞ்சில் சம்பத் பேசுகையில்,

பெரியார், அண்ணா கூட இத்தனை சவால்களை சந்தித்திருக்க மாட்டார்கள். ஆனால் அத்தனை சவால்களை வைகோ சந்தித்துவருகிறார். தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி மதிமுக. இந்தக் கட்சிக்கு உரிய கெளரவத்துடன், உரிய பங்கை வருகிறசட்டசபைத் தேர்தலில் கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அணி மாற வேண்டியிருக்கும். கூட்டணிக் கட்டுப்பாடு என்ற போர்வையில் எங்களை ஈரத் துணியைப் போட்டுஅப்படியே அமுக்க முயலுகிறார்கள். அது இனியும் நடக்காது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முக்கியக் காரணம் வைகோவும், மதிமுகவும்தான். இதைநாங்கள் சொல்லவில்லை. சோனியா காந்தியே கூறியுள்ளார். எனவே எல்லாவற்றையும் மனதில் வைத்து தொகுதி உடன்பாட்டைப்பற்றிப் பேசுவதுதான் நல்லது என்றார் நாஞ்சில் சம்பத்.

வைகோவின் மனசாட்சியே இப்படிப் பகிரங்கமாக பேசியிருப்பதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X