அம்மா துதி பாடிய பாஜக எம்எல்ஏ
சென்னை:
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, நல்லாட்சி தர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை, சட்டசபையில் பாஜக உறுப்பினர்கே.என்.லட்சுமணன் வாழ்த்தினார்.
சட்டசபையில் பூஜ்ய நேரத்தின்போது சென்னை மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதி பாஜக உறுப்பினர் கே.என்.லட்சுமணன்பேசுகையில்,கடந்த நான்கரை வருடங்களாக, சகோதர, சகோதரிகளாகப் பழகி விட்டோம். இது கடைசிக் கூட்டத் தொடர். பிரியப் போகும்நேரம் வந்து விட்டது.
மக்கள் நலனுக்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒன்றுபட்டு போராடினோம். ஹோட்டல்களில் சாப்பிட்டுவிட்டுபோகும்போது நன்றி, மீண்டும் வருக என்ற வாசகத்தைப் பார்ப்போம். ஆனால் அது மாதிரியான வாசகங்களோ அல்லதுபோர்டோ சட்டசபையில் கிடையாது.
(ஜெயலலிதாவைப் பார்த்து) மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும். இன்னொரு நல்லாட்சியைத் தர வேண்டும் என்றுஅம்மாவை வாழ்த்துகிறேன் என்றார் லட்சுமணன்.
அவர் இவ்வாறு கூறியதும் அதிமுக உறுப்பினர்கள் பலமாக மேசைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
கருணாநிதிக்கு அதிமுக பதிலடி:
இதற்கிடையே, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் திமுக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம் நடந்த அதே இடத்தில் இன்றுமாலை அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் திமுக கூட்டணி சார்பில் பிரச்சார இயக்க பொதுக் கூட்டம் நேற்று முன் தினம்தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதிஉள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பொதுக் கூட்டத்திற்கு பெரும் கூட்டம் திரண்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி,முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டர் மற்றும் ஆடிட்டர் ஆகியோரது வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனைகுறித்துப் பேசினார்.
கூட்டத்தில் கருணாநிதி கூறிய கருத்துக்களை கடுமையாக ஆட்சேபித்துள்ள ஜெயலலிதா, அவர் மீது அவதூறு வழக்குத்தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் திமுக பிரசார கூட்டத்திற்குப் போட்டியாக பதிலடிக் கூட்டம் நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது. திமுக கூட்டம்நடந்த அதே சிந்தாதிரிப்பேட்டையில், அதிமுக சார்பில் இன்று மாலை பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இதற்கு ஆட்களைத் திரட்டி வரும் வேலையில் சென் மாவட்ட அதிமுக புள்ளிகள் பிஸியாகிவுள்ளனர்.
இக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி, எம்.பி கோகுல இந்திரா, சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த நடிகர் ஆனந்தராஜ்உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசவுள்ளனர். நடிகர் வந்தால் கூட்டம் வரும் என்ற நம்பிக்கை போலும்.












Click it and Unblock the Notifications