For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைப்பேன்- மாட்டேன்: விஜயகாந்த் பல்டி

By Staff
Google Oneindia Tamil News

திண்டுக்கல்:

சட்டசபைத் தேர்தலில் எனது கட்சி தோல்வியைச் சந்தித்தால் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விடுவேன் என்று பொதுக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜயகாந்த் கூறினார்.

ஆனால், சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் நான் அந்தப் பொருளில் பேசவில்லை என்று மறுத்துள்ளார்.

தொண்டை வலி காரணமாக ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்ட விஜயகாந்த்தின் திண்டுக்கல் தேர்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,

நான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கிராமங்கள் தோறும், ஐந்து ஊர்களுக்கு ஒரு மருத்துவமனை, கால் நடைமருத்துவமனைகளைக் கொண்டு வருவேன். 3 மாதத்திற்கு ஒரு முறை எல்லா ஊர்களுக்கும் வருவேன்.

மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன். ஊழல் இல்லாதஆட்சியைக் கொடுப்பேன். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

ஒருவேளை நான் இந்தத் தேர்தலில் தோற்று விட்டால், எனது கட்சியைக் கலைத்து விடுவேன். திரும்பவும் சினிமாவுக்குப் போய்நடிப்பேன்.

சமீபத்தில் சென்னை கல்லூரி ஒன்றின் கருத்துக் கணிப்பில் எனக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இதை எந்த டிவி சேனலும்கூறவில்லை. எனவே தயவு செய்து மக்கள் டிவி சேனல்களைப் பார்க்காமல் செய்தித் தாள்களைப் படித்து உண்மையானசெய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் மக்கள் பக்கம் உள்ளேன், மக்கள் என் பக்கம் உள்ளனர். சுனாமி நிதியை என்ன செய்தாய் என்று கேட்கும் சிலர் (கருணாநிதி)தங்களது பக்கத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான படகுகளை வைத்துள்ள மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, (தேசிய நெடுஞ்சாலைத்துறையால் விஜய்காந்தின்கல்யாண மண்டப இடிப்பை நினைவில் கொள்க) சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்ரு ஒரு படகையாவது கொடுத்தாரா?அவர் எந்த உதவியும் செய்யவில்லை. மாறாக மாநில அரசைப் பார்த்து கேள்வி கேட்கிறார்.

நான் ஆட்சி அமைத்தால் ரேஷன் பொருட்களை வீடு தேடி வரச் செய்வேன். இது எப்படி சாத்தியம் என்று கேட்டு கேலிசெய்கிறார்கள். பால், பேப்பர், கேஸ் எல்லாம் வீடு தேடி வரவில்லையா?. அது மாதிரி ரேஷன் பொருட்களையும் வீடு தேடி வரச்செய்ய முடியும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்வார்கள். நான் சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்கு உதவும் எண்ணம்கொண்டவன். எனவே எனது இறுதி மூச்சு வரை மற்றவர்களுக்கு உதவிக் கொண்டுதான் இருப்பேன் என்றார் விஜயகாந்த்.

கலைக்க மாட்டேன் என்று பல்டி:

இந் நிலையில் விஜயகாந்த் சார்பில் சென்னையில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தின் நான்பிரசாரம் செய்தபோது மக்களுக்கு இப்போது கொடுக்கும் வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றுபேசியதை தவறான பொருளில் புரிந்து கொண்டு சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இந்தச் செய்திக்காக நான் வருந்துகிறேன். எந்தக் காலத்திலும் சொன்ன சொல்லை மாற்றி நான் பேச மாட்டேன். கொடுத்தவாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து கொள்ள மாட்டேன்.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது நிலையானது அல்ல. அதனால் தோல்விவ அடைந்தால் கட்சியைக் கலைப்பேன் என்றபேச்சுக்கே இடமில்லை. அதில் ஊசிமுனை அளவுக்கும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் தமிழ் மக்களின் பொது நலன் ஒன்றை மட்டுமே முன் வைத்து நான் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளேன். இதில் எந்தவிதசுயநலமும் இல்லை. தமிழ் மக்களின் நன்மை தீமைகள், எனது நன்மை தீமைகளாகும். யாரிடமும் நான் வளைந்து போகமாட்டேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

அரசியல் என்றாலே பல்டி தானே.. ஆல் த பெஸ்ட் மிஸ்டர் விஜய்காந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X