நாளை மத்திய அமைச்சரவை மாற்றம்
டெல்லி:
மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடக்கும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்று ஆலோசனை நடத்தினர். பிரதமரின்இல்லத்தில் இச் சந்திப்பு நடந்தது. அப்போது சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேலும் உடனிருந்தார்.ஜனாதிபதி கலாம் வரும் 31ம் தேதி முதல் 10 நாட்களுக்கு 3 வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இந் நிலையில்நாடாளுமன்றத்தின் பட்ஜட்ெ கூட்டத் தொடர் பிப்ரவரி 16ம் தேதி தொடங்குகிறது.
மத்தியில் பல அமைச்சர் பதவிகள் காலியாக உள்ள நிலையில், நாளையே அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார்.
வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் ராஜினாமா செய்தது, கொலை வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோச்சா தலைவரும்மத்திய அமைச்சருமான சிபுசோரன் பதவி விலகியது,
அமைச்சர்கள் பிஎம் சயீத், சுனித் தத் ஆகியோர் மரணமடைந்தது, குலாம் நபி ஆசாத் காஷ்மீர் முத்லவரானது, ரகுமான் கான்ராஜ்யசபா துணைத் தலைவரானது ஆகிய காரணங்களால் முக்கிய மத்திய அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்புவதோடு மேலும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர சோனியாமுடிவு செய்துள்ளார்.
இதனால் நாளைய அமைச்சரவை மாற்றத்தின்போது கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே. ஆண்டனி, சோனியாவின் வலது கரமானஅம்பிகா சோனி, காங்கிரஸ் மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், கரன் சிங், கேரள காங்கிரஸ் முக்கிய புள்ளியான வயலார் ரவி,சல்மான் குர்ஷித், சிபு சோரன் உள்ளிட்டோருக்கு பதவி கிடைக்கும் என்று தெரிகிறது.
மேலும் பல அமைச்சர்களின் துறைகளும் மாறக் கூடும் என்றும், சிலர் மத்திய அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படக் கூடும்என்றும் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications