விமானத்தில் ஈவ்-டீசிங்: 3 பேர் வெளியேற்றம்
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட தயாராக இருந்த ஜெட் ஏர் வேஸ் விமானத்தில் 3 பயணிகள் குடிபோதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட தயாராக இருந்த ஜெட் ஏர் வேஸ் விமானத்தில் குமார், கெளதம், ஜாய்ஸ் என்ற 3பயணிகள் குடிபோதையில் இருந்தனர். விமானத்தில் இருந்த பெண் பயணியை கிண்டல் செய்துள்ளனர்.உடனே அந்தப் பெண் பயணி விமானப் பணிப் பெண்ணிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். விமானப் பணிப் பெண் அந்த 3பயணிகளையும் அமைதியாக அமரும்படி கூறினார். ஆனால் அந்த 3 பேரும் விமானப் பணிப் பெண்ணிடமும் தவறாக நடந்துகொண்டனர்.
இதனால், விமானப் பணிப் பெண் பைலட்டிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து பைலட் குடி போதையில் இருந்த குமார்,கெளதம், ஜாய்ஸ் ஆகிய 3 பேரையும் விமானத்தை விட்டு கீழே இறங்கும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த 3 பயணிகளும்இதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் பைலட் கீழே இருந்த விமான ஊழியர்களிடம் இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே, விமான ஊழியர்கள்விமானத்தில் ஏறி குடிபோதையில் தகராறு செய்த 3 பயணிகளையும் வலுக் கட்டாயமாக விமானத்தை விட்டு இறக்கிபோலீசாரிடம் ஒப்படைத்தனர்.
குடிபோதையில் தகராறு செய்த 3 பயணிகள் மீதும் எழுத்துப் பூர்வமான புகார் இல்லாததால், போலீசார் அவர்களை கடுமையாகஎச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஜெட் ஏர்வேஸ் விமானம் காலதாமதமாக புறப்பட்டு சென்றது.
மூவருமே கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications