மது ஆலை: ஜெ விளக்கம் தரணும்-இல.கணேசன்
சென்னை:
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெரும் அதிருப்தியில் உள்ளன. தேர்தலுக்குள் இந்த கூட்டணி உடைந்து விடும் என அகிலஇந்திய பாஜக துணைத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் உள்ள பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட்கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிருப்தியில் உள்ளன. காங்கிரஸ் கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள் உள்ளன.இந்தக் கட்சிகள் அனைத்தும் தங்களுக்குத் திருப்தி தரும் வகையிலான தொகுதிகள் கிடைக்காவிட்டால் அணி மாறக்காத்திருக்கின்றன. தேர்தலுக்குள் இந்தக் கூட்டணி உடைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்தே போட்டியிடும். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான தயார்நிலையில் இருக்குமாறு (அம்புட்டு ஆள் இருக்கா?) கட்சியினருக்கு நாங்கள் ஏற்கனவே அறைகூவல் விடுத்துள்ளோம்.
மிடாஸ் மதுபானத் தொழிற்சாலை குறித்து தமிழக அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். மிடாஸ் மதுபானத்தொழிற்சாலையில் மட்டும் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், மதுபானங்களை வாங்குவது ஏன் என்பதை விளக்க வேண்டியதுஅரசின் கடமை.
சட்டசபையில் அரசைப் பாராட்டி பாஜக எம்.எல்.ஏக்கள் பேசியதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது அவர்களது சொந்தக்கருத்து, கட்சியுடைய கருத்து அல்ல என்றார் இல.கணேசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications