For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுவரேறி குதிக்கும் திமுக கட்சிகள்- காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வெளியேறி விடாமல் தடுக்க கதவை மூடி வைத்துள்ளார் கருணாநிதி. அதனால்,அங்கிருந்து எப்படி வெளியேறலாம், சுவரேறிக் குதிக்கலாம் என கட்சிகள் காத்துக் கொண்டுள்ளன. அவர்களுக்காக அதிகவின்கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று அதிமுக புதிய அவைத் தலைவரும் மாஜி சபாநாயகருமான காளிமுத்து கூறியுள்ளார்.

அதிமுக அவைத் தலைவரான கையோடு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார் காளிமுத்து. முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியானஆண்டிப்பட்டியிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.

ஆண்டிப்பட்டி வைகை அணை சாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில்,

திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வருவதை ஒரு கடமையாக நினைக்கவில்லை. தொகுதி மக்களுக்காகவும், நாட்டுமக்களுக்காகவும் எந்தக் கோரிக்கைகளையும் அவர் விடுத்ததில்லை.

அதேபோலத்தான் அவரது மகன் ஸ்டாலினும்.

அவர் சபைக்கு வந்தாலும் கூட தமிழக மக்களுக்காகவோ அல்லது அவரது சொந்தத் தொகுதிக்காகவோ எதையும் கேட்டதில்லை.அவர்கள் கேட்டிருந்தால் நிச்சயம் புரட்சித் தலைவி நிறைவேற்றியிருப்பார்.

கட்சி பாகுபாடின்றி வாரிக் கொடுப்பவர் புரட்சித் தலைவி மட்டுமே. காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் காங்கிரஸ்பெண் உறுப்பினர் கிருஷ்ணவேணி அம்மாளின் ஏழ்மை குறித்துக் கூறியபோது, உடனடியாக அவருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி,இலவச வீடு என வாரி வழங்கியவர் புரட்சித் தலைவி.

இப்போது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் சில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்துமே திமுகவுடன் போய்சேர்ந்துள்ளன. அதை இப்போதுதான் அவை உணர ஆரம்பித்துள்ளன. திமுகவை மக்கள் வெறுக்கிறார்கள் என்பது இப்போதுதான்அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

மக்களால் தோற்கடிக்கப்படவுள்ள திமுகவுடன் சேர்ந்துள்ளதால் இவர்களும் அதே தோல்வியை சந்திக்கப் போகிறார்கள். இவர்கள்யாரும் கூட்டணியை விட்டு வெளியே போய் விடக் கூடாது என்பதற்காக கதவை மூடி வைத்துள்ளார் கருணாநிதி.

ஆனாலும், எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று அங்குள்ள கட்சிகள் துடிக்கின்றன. கதவின் தாழ்ப்பாளை உடைத்துஎப்படி வெளியேறுவது, சுவரேறிக் குதிப்பது என தப்பிக்கும் வழிகளை அவை தேடிக் கொண்டிருக்கின்றன.

அவர்கள் வெளியேறி வந்தால் அவர்களுக்காக அதிகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X