கோஷ்டிகள் அதிகமாம்-நிறைய சீட் கேட்கும் காங்
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவிடம்60 தொகுதிகளை கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று சென்னைக்கு வந்த தமிழககாங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான வீரப்ப மொய்லியிடம் தமிழக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவினரும் வற்புறுத்தினர்.
ஆனால், அவர்களுக்கு சரியான முறையில் பதிலளிக்காமல் மொய்லி அவர்களிடமிருந்து விடுபட்டுச் சென்றார்.மொய்லி சனிக்கிழமை சென்னை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த அவர் அங்குநிர்வாகிகளுடன் (கோஷ்டிகள்) ஆலோசனை நடத்தினார். தலைவர் பதவிக்காக கடுமையாக முயற்சித்து வரும் குமரி அனந்தனின்தம்பி வசந்தகுமார் உள்ளிட்ட பலர் மொய்லியை சந்தித்துப் பேசினர்.
மொய்லியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டியினரும், தொண்டர்களும், இம்முறை 60 தொகுதிகளுக்குக்குறையாமல் கேட்டு வாங்க வேண்டும். இல்லாவிட்டால் தொண்டர்கள் மனப்பூர்வமாக செயல்பட மாட்டார்கள் என்றுமொய்லியிடம் கூறினர்.
இதைக் கேட்ட மொய்லி, அதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். அதை தலைமையும் நானும் பார்த்துக் கொள்வோம்.அமைதியாக இருங்கள் என்று சமாதானப்படுத்தினார்.
60 என்ற அளவில், கட்சியின் அத்தனை கோஷ்டியினரும் ஒற்றுமை காட்டியது மொய்லிக்கே சற்று பயமாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
எல்லா விஷயங்களிலும் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியினர் அதிக தொகுதிகளை கட்டாயப்படுத்தி கேட்பதிலும் ஒருமேட்டர் இருக்கிறதாம்.
அதாவது, தற்போது கட்சியில் இருக்கும் கோஷ்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அனைவருக்கும் சம அளவில்பிரித்துக் கொடுக்க நிறைய தொகுதிகள் கிடைத்தால்தான் சரிப்பட்டு வரும் என்பதால்தான் அத்தனை பேரும் கூடுதல்தொகுதிகளை கோரி வருகிறார்கள்.
கூடுதல் தொகுதியை கட்சியின் பலத்தை வைத்து கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம்.. நிறைய கோஷ்டி இருக்கு அதனால்பகிர்ந்து கொள்ள வசதியாக நிறை சீட் வேண்டும் என்று கேட்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications