கருணாநிதியும், உதிரிப் பூக்களும்: காளிமுத்து
திண்டிவனம்:
திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றமுடியாத திட்டங்களையெல்லாம் பூப் பூவாய் மலரச் செய்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் கருணாநிதி போட்ட திட்டங்களெல்லாம் உதிரிப் பூக்களாக உதிர்ந்து நிறைவேறாமலேயே போய் விட்டன என்று அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் நடந்த அதிமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசுகையில், யாராலும் வீரப்பனைப் பிடிக்க முடியாது. ஐ.நா. சபையே வந்தால் கூட சிரமம்தான் என்று பேசினார் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. ஆனால் வீரப்பனை வீழ்த்திக் காட்டினார் ஜெயலலிதா.அண்ணாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் வீராணம் திட்டம். ஆனால் கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தை வைத்து ஏகப்பட்ட ஊழல்களைச் செய்தார். சேத்தியாதோப்பிலிருந்து சென்னை வரை வீராணம் திட்டக் குழாய்கள் காலம் காலமாக துருப்பிடித்துக் கிடந்து வீராணம் திட்டத்தில் கருணாநிதி செய்த ஊழலை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருந்தது.
ஆனால் மக்கள் தாகம் தீர்க்க கொண்டு வரப்பட்ட அந்தத் திட்டத்தை துரித கதியில் முடித்து சென்னை மக்களின் தாகம் தீர்த்தவர் ஜெயலலிதா. அதுமட்டுமா? லாரிகள் மூலமும் சென்னை நகருக்கு தண்ணீர் கொண்டு வந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
பூசணி கொடியில் இரண்டு விதமான பூக்கள் பூக்கும். ஒரு பூ மலரும், இன்னொரு பூ உதிரும். இதில் மலரும் பூதான் ஜெயலலிதா. உதிரும் பூதான் கருணாநிதி.
அதாவது ஜெயலலிதா கொண்டு வந்த, செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே மக்களுக்கு பயன்பட்டன, சாதனை படைத்தன. ஆனால் கருணாநிதி கொண்டு வந்த, செயல்படுத்திய திட்டங்கள் எல்லாம் உதிரிப் பூக்கள் போல உதிர்ந்து, உபயோகப்படாமல், ஊழலுக்கு மட்டுமே வழி வகுத்தன என்றார் காளிமுத்து.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications