காளிமுத்து சுகவீனம்-ஜெ, எல்.கணேசன் சந்திப்பு
சென்னை:
அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து தலைசுற்றல், மயக்கம் காரணமாக சென்னை மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அவரை முதல்வர் ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார்.
காளிமுத்துவுக்கு வியாழக்கிழமை மாலை திடீரென தலை சுற்றலும், மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம், ஈசிஜி உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும்நடத்தப்பட்டன.முழு உடல் பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று டாக்டர்கள்தெரிவித்தனர். காளிமுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த முதல்வர் ஜெயலலிதாஉடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.
காளிமுத்துவிடம் நன்றாக ஓய்வெடுக்கும்படியும், அதிக அளவில் ஸ்டிரெய்ன் செய்து கொள்ள வேண்டாம் என்றும்ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். ஜெயலலிதாவுடன் ஓ.பன்னீர் செல்வம், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன்உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.
இதற்கிடையே அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கழக அவைத் தலைவர்கா.காளிமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், 28.2.2006 வரை நடைபெறுவதாகஅறிவிக்கப்பட்டிருந்த பொதுக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அந்தக் கூட்டங்கள் நடைபெறும் தேதி பின்னர்அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.கணேசன் சந்திப்பு:
இந் நிலையில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசனும் காளிமுத்துவை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னதாக காளிமுத்துவைச் சந்திக்க மதிமுக பொதுச் செயலர் வைகோ வருவார் என்று அதிமுக வட்டாரங்கள் செய்தியைப் பரப்பின. ஆனால், வைகோவிற்குபதில் அவைத் தலைவர் எல்.கணேசன் வந்து காளிமுத்துவிடம் நலம் விசாரித்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அதிமுக கூட்டணிக்கு மதிமுக போகலாம் என்று கூறப்படும் நிலையில், வைகோவிடம் தினமும் பேசி வருகிறேன் என்று காளிமுத்து கூறி வந்த நிலையில்அவரை எல்.கணேசன் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications