வைகோவிடம் இருந்து பதில் இல்லை: கருணாநிதி
சென்னை:
திமுக, மதிமுக இடையே புகைந்து கொண்டிருந்த மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது.
தாங்கள் கோரும் தொகுதிகளின் பட்டியல் குறித்து மதிமுக இன்னும் கடிதம் தரவில்லை என்றும், மதிமுகவின்கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் பேச்சு கூட்டணிக்கு உலை வைப்பதாக இருப்பதாகவும் திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.நிருபர்களிடம் பேசிய அவர்,
வைகோவுடன் காளிமுத்து பேசி வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு விளக்கம் கேட்டு ஆற்காடு வீராசாமிவெளியிட்ட அறிக்கைக்கு மதிமுகவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
தொகுதிகளின் பட்டியல் குறித்தும் அவர்கள் கடிதம் ஏதும் தரவில்லை. மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்பதவியில் இருப்பவர் திமுக குறித்து மிக மோசமாக பேசியிருக்கிறார்.
கூட்டணியில் இருந்து மதிமுக ஒதுங்குகிறதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். பிரதமரிடம் வைகோஎன்ன பேசினார் என்று எனக்கு ஏதும் தெரியாது.
மத்தியில் கூட்டணியை ஆதரிப்பது, மாநிலத்தில் அதிமுக கூட்டணிக்குப் போவது என்று பிரதமரிடம் அவர் ஏதும்சொன்னாரா என்று எனக்கு ஏதும் தெரியாது.
மதிமுக விஷயத்தில் இதற்கு மேல் எனக்கு ஏதும் சொல்லத் தெரியவில்லை. அதிமுகவை ஆதரிப்பது என்று மதிமுகஒரு முடிவை எடுத்தால் நாங்களும் எங்கள் முடிவினை எடுப்போம்.
கடந்த ஜனவரி 26ம் தேதியே வைகோவை எனது இல்லத்துக்கு அழைத்து ஒன்றரை மணி நேரம் பேசினேன்.அப்போதே தொகுதிகளின் எண்ணிக்கை கூட முடிவு செய்யப்பட்டது. ஒன்றிரண்டை குறைத்துக் கொள்ளுங்கள்என்று கூட நான் அப்போது கேட்டுக் கொண்டேன்.இதன் பிறகு பத்திரிக்கைகளில் பல வதந்திகளும் ஹேஸ்யங்களும் வந்ததே தவிர வேறு எந்தத் தகவலும்மதிமுகவிடம் இருந்து கிடைக்கவில்லை. துரைமுருகன் கூட வைகோவை சந்தித்துப் பேசினார். அப்போதும்திட்டவட்டமான பதில் கிடைக்கவில்லை.
கவிஞர் வைரமுத்து மூலமாக முயற்சி எடுக்கப்பட்டும் பலன் கிடைக்கவில்லை. வைகோ விஷயத்தில் கெடு எதையும்நாங்கள் நிர்ணயிக்கப் போவதில்லை. இப்போது பந்து அவர் பக்கம் தான் உள்ளது என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications