அதிமுகவுடன் பேரம்: வைகோவுக்கு திமுக முழுக்கு!
சென்னை:
திமுக கூட்டணியில் இருப்பது மாதிரி போக்கு காட்டி விட்டு அதிமுகவுடன் பேரம் பேசி வருகிறது மதிமுக. இதுநாணயமான அரசியல் அல்ல என்று திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா, அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி கடந்த சில வாரங்களாகபடுசூடாக நிலவிவந்தது. தற்போது அந்தக் கேள்விக்கு ஒரு வழியாக விடை கிடைத்துள்ளது. திமுக கூட்டணியில்இனியும் மதிமுக நீடிப்பது சாத்தியமல்ல என்ற ரீதியில் திமுக சார்பில் படுசூடான அறிக்கை ஒன்றுவெளியாகியுள்ளது.திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதிமுகவை கடுமையாக சாடியிருக்கிறார்.நாணயமற்ற அரசியலை மதிமுக நடத்துவதாக அவர் தாக்கியுள்ளார்.
வீராசாமியின் அறிக்கை: திமுக தலைமையில் உள்ள கூட்டணியில் இருப்பதாக கருதப்படும் நிலையில்,கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுகவை இழிவுபடுத்தும் வகையிலும், திமுக தொண்டர்களிடையேகுமுறலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகின்ற வகையிலும், திமுக குடும்ப அரசியலையும், மறைக்கப்பட்டஉண்மைகளையும் அம்பலப்படுத்துவோம் என்று மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் (நாஞ்சில் சம்பத்) என்றமுக்கிய பொறுப்பில் இருப்பவரே கூறியிருக்கிறார்.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் (வைகோ) விடுத்த அறிக்கையில், இவரது பேச்சு குறித்து விளக்கம்கேட்கப்படும் என்று கூறி வருத்தம் தெரிவித்த பிறகும், இன்றைய பத்திரிக்கையில் மறுபடியும் பேட்டிகொடுத்திருக்கிறார்.
கூட்டணியில் உள்ள கட்சிகளை புண்படுத்தும் வகையில், மதிமுக அவைத் தலைவர் (எல்.கணேசன்) என்ற பிரதானபொறுப்பு வகிப்பவரே மதிமுகவை கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சி என்று ஏற்க மறுப்பவன் முட்டாள் என்றுகடுமையான வார்த்தையை பயன்படுத்தி பேட்டி அளித்திருக்கிறார்.
நேற்றைய தினம் கருணாநிதி அளித்த பேட்டியில், இன்னமும் தொகுதி விவரப் பட்டியலையோ அல்லது அதுஎப்போது வழங்கப்படும் என்ற விவரத்தையோ மதிமுக சார்பில் மட்டும் அறிவிக்கவில்லை என்று தெரிவித்தபிறகும் அது பற்றி தொலைபேசி வாயிலாகக் கூட எந்தத் தகவலும் கூறவில்லை.
பத்திரிக்கைகளில் அவர்கள் இஷ்டத்திற்கு ஹேஷ்யங்கள் வெளியிடுவதற்கு இடம் தந்து அதன் காரணமாககூட்டணியின் மதிப்புக்கே களங்கம் ஏற்படுகின்ற சூழ்நிலையை உருவாக்குகிறார்கள்.
கூட்டணியில் இருப்பது போல போக்கு காட்டிக் கொண்டு, பிற கட்சிகளுடன் பேச அவகாசம் ஏற்படுத்திக்கொள்வது நாணயமான அரசியலாக இருக்க முடியாது என்று ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மதிமுகவின் போக்கு குறித்து திமுக பொருளாளர் கடுமையான விமர்சனம் செய்திருப்பது திமுக கூட்டணியில்இனியும் மதிமுக நீடிக்காது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. ஆற்காடு வீராசாமியின் அறிக்கைக்குஇதுவரை மதிமுக தரப்பிலிருந்து எந்தவித பதிலும் இல்லை.
கருணாநிதியிடம் தொகுதிப் பட்டியலைத் தர வேண்டிய வைகோ தற்போது அவரது சொந்த ஊரானகலிங்கப்பட்டிக்குப் போய்விட்டார். அங்கிருந்தபடியே அதிமுகவுடன் வைகோ பேசி வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications