பிளாப் ஆன பாஜக மக்கள் தரிசன யாத்திரை
சென்னை:
முன்னாள் பாஜக மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்க தமிழகத்தில் பாஜக நடத்தி வரும் மக்கள்தரிசன யாத்திரைகள் முழு பிளாப் ஆகியுள்ளன.
இந்த யாத்திரையை நடத்தும் தலைவர்களின் பின்னால் செல்வதற்கு அதிகபட்சம் 10 பேர் கிடைப்பதே அரிதாகஉள்ளது. அதிலும் மிக மோசமாக உள்ளது காரைக்குடி எம்எல்ஏவும் மாநில பொதுச் செயலாளருமான எச்.ராஜாநடத்தி வரும் யாத்திரையில் 4,5 பேர் மட்டுமே உடன் செல்கின்றனர்.
![]() |
| வெறும் 4 பேர் மத்தியில் பேசும் ராஜா |
யாத்திரை செல்லும் வழியில் அவர் பேசுவதற்கு மைக் செட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், யாருமேகூட்டத்துக்கு வராததால் பல இடங்களில் தனது பேச்சை ரத்து செய்துவிட்டு நடந்தார் ராஜா.
அரவக்குறிச்சியில் மட்டும் பேசிய அவர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்களுக்கு என்ன செய்யலாம் என்றசிந்தனையே இல்லை. சசிகலாவுக்கு என்ன செய்யலாம் என்று தான் எப்போதும் யோசிக்கிறார்.
மத்திய அரசையும் மந்திரிகளையும் குறை சொல்வதும் அவர்கள் தன்னை வந்து பார்க்கவில்லை என்று புகார்சொல்வதுமாக பொழுது போக்கி, ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் என்றார்.
முன்னதாக பூந்தமல்லியில் நடந்த மக்கள் தரிசன யாத்திரையில் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர்இல.கணேசன்,
நாத்திகம் பேசி ஆட்சியைப் பிடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது ஆத்திகம் பேசினால் தான்பதவிக்கு வர முடியும் என்ற நிலை வந்துவிட்டது. இனி யாராவது இந்துத் துறவிகளையோ,சங்கராச்சாரியார்களையோ இழிவுபடுத்திப் பேசினால், அவன் வீட்டுக்குச் செல்வதற்குள் இரு கைகளும்இருக்காது.
ஜெயலலிதா-சசிகலா குரூப் சாராய கம்பெனி நடத்துவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஜெயலலிதாவுக்குயாருமே கிடையாது. யாருக்காக இப்படி சொத்து சேர்க்கிறார்.
தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்தத் தேர்தலில் எதிர்க் கட்சியாக உட்காரவையுங்கள். அடுத்த தேர்தலில் ஆட்சியை அமைக்கும் நிலைக்கு வந்துவிடுவேம் என்றார் இல.கணேசன்.
![]() |
| முதலில் வைக்கப்பட்ட பேனரும் (இடது) மாற்றப்பட்ட பேனரும் |
முன்னதாக சங்கராச்சாரியாரை விலங்கிட்டு அழைத்துச் செல்வதைப் போல காஞ்சிபுரத்தில் வைக்கப்பட்டவிளம்பரத்தை, பாஜகவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிமுகவினர் அகற்றிவிட்டு வேறு ஒரு விளம்பரத்தைவைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி














Click it and Unblock the Notifications