For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணியும் ஒட்டக வியாபாரியும்: ஜெ கதை

By Staff
Google Oneindia Tamil News

திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் வழக்கம் போல் கதை சொல்லி திமுக கூட்டணியைவாரினார் முதல்வர் ஜெயலலிதா.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது:

திரையுலக கலைஞர்களே, அரசு அலுவர்களே (அடடே.., இது என்ன திடீர்னு), பொது மக்களே என் கனிவானவணக்கம்.

கடந்த ஆட்சியில் (திமுக) கலைத்துறை சாதனையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டார்களா என்றால், அது இலலை.திரையுலகம் தான் என் தாய் வீடு.

திரையுலகம் அழிந்து போகும் நிலையில் இருந்தபோது நான் அதற்கு புத்துணர்ச்சி ஊட்ட திருட்டு விசிடியைஒழித்தேன். வரி விதிப்பை குறைத்தேன். தியேட்டர்களுக்கு கேளிக்கை வரியை நீக்கினேன். என்னைவளர்த்துவிட்ட திரைத்துறையை நான் மற்கக மாட்டேன்.

கத கேளு கத கேளு...

இச் சமயத்தில் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு ஊரிலே காய்கறி வியாபாரி, பழ வியாபாரி, மண் பாண்ட வியாபாரி, கண்ணாடி பொருள் வியாாரிஆகியோர் (திமுக கூட்டணி கட்சிகள்) இருந்தனர். இவர்களுக்கு ஒருவர் வாடகைக்கு ஒட்டகம் கொசுத்து வந்தார்.இவர்களோடு ஒட்டக வியாபாரி (கருணாநிதி) கூட்டு அமைத்து ஊருக்கு நன்மை செய்தவாகக் கூறினார்.

டெல்லி சந்தையிலேயே (நாடாளுமன்றத் தேர்தல்) பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறிஊர் மக்களிடம் முன் பணமும் பெற்றுக் கொண்டனர். டெல்லி சந்தைக்குப் போய் காய்கறி வியாபாரி காய்வாங்கினார். பழ வியாபாரி பழம் வாங்கினார். கண்ணாடி வியாபாரியும் மண் பாண்ட வியாபாரியும்பொருட்களை வாங்கினர்.

எல்லாவற்றையும் கயிற்றில் கட்டி ஒட்டகத்தில் ஏற்றினர். ஒரு பக்கத்தில் பழம்-காய்கறிகளையும், இன்னொருபக்கம் கண்ணாடி, மண்பாண்டங்களையும் தொங்கவிட்டனர்.

ஒட்டகத்தின் பின்னே இவர்கள் நடந்தனர். இதல் ஒட்டக உரிமையாளர் மட்டும் ஒட்டகத்துடன் நடந்தார்.மற்றவர்கள் சோர்வடைந்து பின் தங்கிவிட்டனர். நடந்து வந்த ஒட்டக் ஒரு பக்க கயிற்றில் தொங்கிய காய்கறிகளைஇழுத்துத் தின்றது. பின்னர் பழத்தையும் தின்றது.

ஆனால், ஒட்டகத்தை ஓட்டிச் சென்றவர் அதைத் தடுக்கவில்லை. தீனி மிச்சம் என்று விட்டுவிட்டார். இதைப் பார்த்தவியாபாரிகள் அலறியடித்தபட ஒட்டத்தை நோக்கி ஓடினர்.

உனக்கு இரக்கம் இல்லையா என்று அவரிடம் (கருணாநிதியிடம்) கேட்டனர்?. இதற்குள் காய், பழத்தை ஒட்டகம்தின்றதால், மறு பக்கம் கட்டப்பட்டிருந்த கண்ணாடி, மண்பாண்ட மூட்டையும் கீழே வழுந்து அதிலிருந்தபொருட்கள் உடைந்தன.

இந்த வியாபாரிகளை நம்பி பணம் தந்த மக்கள் (ஓட்டு போட்ட மக்கள்) பெரும் நஷ்டம் அடைந்தனர். சிலமாதங்கள் கழித்து இந்த வியாபாரிகள் மீண்டும் கூட்டு சேர்ந்தனர் (இப்போதுள்ள திமுக கூட்டணி). இந்த முறைசென்னைக்குச் சென்று (சட்டமன்றத் தேர்தல்) மலிவு விலையில் பொருட் வாங்கித் தருவதாகக் கூறினர்.

ஆனால், மக்கள் இப்போது ஏமாறத் தயாராக இல்லை. டெல்லி சந்தையை (நாடாளுமன்றத் தேர்தலை) சொல்லிநம்பிக்கை துரோகம் செய்தது போல சென்னை சந்தையை (சட்டமன்றத் தேர்தல்) சொல்லி ஏமாற்ற முடியாது.

ஏனென்றால் நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் (அப்போ வைகோவை கூவிக் கூவிக்கூப்பிட்டது.., திண்டிவனத்தை இழுத்தது) என்றார் ஜெயலலிதா.

தேர்தல் நேரத்தில் இப்படி நிறைய கதைகள் தேவைப்படும் என்பதால் சர்வோதயா புக் ஸ்டால் உள்ளிட்டஇடங்களுக்கு ஆளும் தரப்பில் இருந்து ஆட்கள் முற்றுகையிட்டு பீர்பால், முல்லா, தெனாலிராமன் கதைப்புத்தகங்களைத் தேடி அள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதை உல்டா செய்துதிமுக கூட்டணியை வாருவார்களாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X