டெல்லி-சோனியா, சிங்குடன் வைகோ ஆலோசனை
டெல்லி:
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் மதிமுக பொதுச்செயலாளர் சந்தித்துப் பேசினார்.
முதலில் பிரதமரை சுமார் அரை மணி நேரம் சந்தித்த வைகோ. பின்னர் சோனியாவை அவரது இல்லத்தில்சந்தித்து அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.பிரதமருடன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பது குறித்து விளக்கிய வைகோ இலங்கை விவகாரம், தமிழகதிட்டங்கள் குறித்தும் விவாதித்ததாகத் தெரிகிறது.
சோனியா காந்தியுடன் முழுக்க முழுக்க தமழக கூட்டணி விவகாரம் குறித்து வைகோ விவாதித்தார். கடந்த முறைபிரதமரை சந்தித்தபோது திமுக கூட்டணியில் தான் நீடிப்பது சந்தேகமே என்றும், அதே நேரத்தில் மத்திய அரசுக்கூட்டணிக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறிவிட்டு வந்தார்.
இப்போது வைகோவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் தொடர முடிவெடுத்துவிட்டவைகோ அதை பிரதமரிடமும் சோனியாவிடமும் நேரில் தெரிவித்ததோடு, தனது கட்சிக்கு கூட்டணியில் போதியஇடங்கள் வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தனது கட்சிக்கு பாமகவுக்கு இணையான இடங்கள் கிடைக்கச் செய்ய திமுக தலைவர் கருணாநிதியுடன் நீங்களும்பேச வேண்டும் என சோனியாவிடம் வைகோ கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
இந நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வைகோகூட்டியுள்ளார். அதில், திமுக கூட்டணியில் தொடர்ந்தது ஏன் என்பது குறித்து வைகோ விளக்குவார் என்றுதெரிகிறது.
மேலும் தேர்தல் வியூகம், கூட்டணி விவகாரம், தேர்தல் செலவுகள், யார் யாருக்கு சீட் என்பது குறித்து வைகோவிவாதிக்கவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications