பட்ஜெட்-வருமான வரியில் மாற்றமில்லை, சிகரெட் விலை உயரும்-கார் விலை குறையும்-ஏடிஎமுக்கு வரி
டெல்லி:
2006-07ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார்.
இதில் வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமானவரிக்கான குறைந்தபட்ச உச்ச வரப்பு உயர்த்தப்படலாம் என்றும், வரிச் சலுகைகள்அறிவிக்கப்படலாம் என்றும் கருதப்பட்டது. ஆனால், அதை சிதம்பரம்செய்யவில்லை.
வழக்கம்போல் மாத வருவாய் பிரிவினரை வதைப்பதை சிதம்பரம் இந்தபட்ஜெட்டிலும் தொடர்ந்துள்ளார்.
பட்ஜெட்டில் பெரிய அளவில் புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லை என்றாலும்ஏடிஎம் வசதியைப் பயன்படுத்துவதற்கு சேவை வரி கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல விமான டிக்கெட் மீதும் சேவை வரி போடப்பட்டுள்ளது.
வழக்கம்போல் சிகரெட் மீதான கலால் வரி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அதன்விலை கூடும். சிறிய கார்கள் மீதான கலால் வரி 10 சதவீதம் வரைகுறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.
அதே நேரத்தில் 10 எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகள், 14 புற்று நோய் மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள் மீதானசுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான திட்டங்கள்:
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்படவுள்ளது. சென்னை பல்லைக்கழகத்துக்கு ஆராய்ச்சித்திட்டங்களுக்காக சிறப்பு நிதியாக தலா ரூ. 50 கோடி வழங்கப்படவுள்ளது. தஞ்சையில் தேசிய உணவுபதப்படுத்தம் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
4 புதிய இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி மையங்கள் திறக்கப்படும். இதில் ஒன்று தமிழகத்தில் அமையும்என்று தெரிகிறது.
சென்னையில் உள்ள துறைமுகக் கல்விக் கழகம், மத்திய பல்கலைக்கழகத்துக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். அதன் பெயர்தேசிய கடல்சார் அகடெமி என்று மாற்றப்படும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:
கல்வித் துறைக்கான ஒதுக்கீடு 21 சதவீதம் அதிகரிக்கப்படும்
மின் உற்பத்தி 34,000 மெகா வாட்டாக அதிகரிக்கப்படும்
நாட்டின் கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு பகுதிகளை இணைக்கும் தங்க நாற்கர சாலைத் திட்டப் பணிகள் 2008ம் ஆண்டு ஏப்ரலில் முடிவடையும்.
நகைகள், விலைமதிப்பில்லா கற்கள் ஏற்றுமதிக்கு என தனி வாரியம் அமைக்கப்படும். நகை ஏற்றுமதிக்கு ஆலோசனைகூற நிபுணர் குழு அமைப்பு.
விவசாய கடனுக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாக குறைப்பு
விவசாயக் கடனுக்காக ரூ. 1,75,000 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகளுக்கு கடனுதவிவழங்கப்படும்
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை தரம் உயரும்:
சென்னை-பெங்களூர், டெல்லி-ஜெயப்பூர், டெல்லி-மீரட், டெல்லி-ஆக்ரா இடையே 1,000 கி.மீ தூரத்துக்குநெடுஞ்சாலைகள் தரம் உயர்த்தப்படுகின்றன.
4 புதிய இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி மையங்கள் திறக்கப்படும்.
சென்னையில் உள்ள துறைமுகக் கல்விக் கழகம், மத்திய பல்கலைக்கழகத்துக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.அதன் பெயர் தேசிய கடல்சார் அகடெமி என்று மாற்றப்படும்.
பாதுகாப்புத்துறைக்கான ஒதுக்கீடு ரூ. 83,000 கோடியில் இருந்து ரூ. 89,000 கோடியாக உயர்த்தப்படும். இதில்ராணுவத்துக்கு ரூ. 32,458 கோடியும், விமானப் படைக்கு ரூ. 9,858 கோடியும், கடற்படைக்கு ரூ. 6,713கோடியும், முப்படைகளின் நவீனமயமாக்கும் பணிக்கு ரூ. 37,458 கோடியும், பாதுகாப்பு ஆராய்ச்சிக்கு ரூ. 3,008கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ. 9,945 கோடி ஒதுக்கப்படும்
நாடு முழுவதும் 25 கோடி புதிய தொலைபேசி இணைப்புகள் வழங்கப்படும். இதில் கிரமப் புறங்களுக்கு 5 கோடிஇணைப்புகள் ஒதுக்கப்படும்.
சென்னை பல்கலைக்கு ரூ. 50 கோடி:
சென்னை, கொல்கத்தா, மும்பை பல்லைக்கழகங்களுக்கு சிறப்பு ஆராய்ச்சி நிதியாக தலா ரூ. 50 கோடிவழங்கப்படும்.
பஞ்சாப் விவசாயப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்படும்.
வரி மூலமான மொத்த வருவாய் கடந்த ஆண்டில் 21.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வருவாய் பற்றாக்குறை 2.6 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
பேக்கேஜிங் துறைக்கான இயந்திரங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
10 எய்ட்ஸ் எதிர்ப்பு மருந்துகள், 14 புற்று நோய் மருந்துகள் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
உயிர் காக்கும் மருந்துகள் மீதான வரி 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதாகக் குறைக்கப்படுகிறது
கார், சிகரெட்:
சிறிய கார்கள் மீதான கலால் வரி 24 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. இதனால் கார்களவிலை கணிசமாகக் குறையும்.
சாப்ட் டிரிங்ஸ் மீதான வரியும் 24ல் இருந்து 16 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது.
சிகரெட் மீதான கலால் வரி 5 சதவீதம் உயர்கிறது. இதனால் சிகரெட் விலை கூடுகிறது.
சாப்ட்வேர் மீது 8 சதவீத வரி:
இட்லி மிக்ஸ் மீதான கலால் வரி பாதியாகக் குறைக்கப்படும்.
பேக்கேஜ்ட் சாப்ட்வேர் மீது 8 சதவீத கலால் வரி விதிக்கப்படுகிறது.
பால் உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் மீதான கலால் வரி ரத்து செய்யப்படுகிறது.
கைத்தறித் துணிகள் மீதான கலால் வரி பாதியாகக் குறைக்கப்படுகிறது.
வருமான வரி விகிதங்களில் மாற்றம் இல்லை
அதே போல கார்போரெட் டேக்ஸ் எனப்படும் நிறுவனங்கள் மீதான வரியிலும் மாற்றம் ஏதுமில்லை.
ரூ. 250க்கு மேல் விலையுள்ள செருப்புகள் வாங்கினால் விதிக்கப்பட்டு வந்த வரி நீக்கப்பட்டு, அதன் உச்ச வரம்புரூ. 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏடிஎம்மில் காசு எடுத்தால் சேவை வரி:
ஏடிம் சேவை, விமானப் பயணம் (எகானமி வகுப்பு தவிர) ஆகியவற்றின் மீதும் சேவை வரி (சர்வீஸ் டேக்ஸ்)விதிக்கப்படும்
வங்களில் பெரிய அளவில் பணம் போடும் போதும், எடுக்கும் போதும் பேன் (கஅ) எண்ணைக் குறிப்பிடவேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.
ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உணவு, கேன்டீன் வசதிகள் ஆகிய செலவீனங்கள் மீதான வரிகுறைக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் மீதான சுங்க வரி 10லிருந்து 5 சதவீதமாக குறைப்பு
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.4,863 கோடி ஒதுக்கீடு
2006-07ல் பொருளாதார வளர்ச்சி 8.1சதவீதம் இருக்கும்
தேயிலை துறைக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
தஞ்சையில் உணவு ஆய்வு மையம்:
தஞ்சையில் தேசிய உணவு பதப்படுத்தம் ஆய்வு மையம் அமைக்கப்படும்
கம்ப்யூட்டர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்
நிதி திரட்டும் நோக்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சேவை வரி விதிக்கப்படும்
சொந்தத் தொழில் செய்பவர்கள் 6ல் ஒரு திட்டத்தின் கீழ் வரி விதிப்புக்கு கணக்குதாக்கல் செய்வது ரத்து செய்யப்படுகிறது.
8வது வகுப்பு பாஸ் செய்யும் பெண்களுக்கு ரூ. 3,000 உதவித் தொகைவழங்கப்படும்
காகிதத்திற்கான சுங்க வரி குறைப்பு
நாடு முழுவதும் பள்ளிகளில் 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
கிராமப் புற வளர்ச்சி:
கிராமப் புறங்களுக்கு குடிநீர் வழங்கும் ராஜிவ் காந்தி தேசிய குடிநீர் திட்டத்துக்கு ரூ. 4,680 கோடி ஒதுக்கீடு.
40,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு, கிராமப்புற சாலை மேம்பாட்டுக்கு ரூ. 4,000கோடி
மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ. 4,800 கோடி ஒதுக்கீடு.
குழந்தைகள் நலத் திட்டத்துக்கு ரூ. 4,087 கோடி ஒதுக்கீடு
கிராமப் புற தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்துக்கு ரூ. 14,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை ரூ. 75ல் இருந்துரூ. 200 ஆக அதிகரிக்கப்படுகிறது
தாழ்த்தப்பட்டோர், மலை வாழ் மக்கள் நலத் திட்டத்துக்கான நிதி அதிகரிப்பு
உருது மொழி மேம்பாட்டு கவுன்சிலுக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 13 ஆக அதிகரிப்பு
மாருதி கார் விலை குறைகிறது:
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் மாருதி கார்களின் 5 மாடல்களின் விலை ரூ. 13,000ல் இருந்து ரூ.22,000 வரை குறையும் என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications