• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நாளை திருச்சி திமுக மாநாடு-திருப்பு முனையா?

By Staff
|

சென்னை:

Karunanidhi arriving at Trichy for DMK Conference
திருச்சி மாநாட்டுக்கு வந்திறங்கும் கருணாநிதி
கூட்டணியில் ஏகத்துக்கும் குழப்பம், யார் யார் கூட்டணியை விட்டு போகப் போகிறார்கள், யார் இருக்கப் போகிறார்கள் என்பது உறுதியாகாத நிலையில் திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு தொடங்குகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக திமுக கருணாநிதி இன்று காலை விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார்.

திருச்சி விமான நிலையம் அருகே திமுக வாங்கிப் போட்டுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் சுமார் 120 சரி செய்யப்பட்டு மாநாட்டுத் திடல் உருவாக்கப்பட்டுள்ளது.

பல கோடி செலவில் ஏகப்பட்ட தடபுடல் ஏற்பாடுகளுடன் மாநாடுக்கு திருச்சி தயாராகியுள்ளது.

இந்த 3 நாள் மாநில மாநாடு நாளை (3ம் தேதி, வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

மாநாட்டு வேலைகளில் ஒரு பக்கம் இறங்கியவாரே கூட்டணிக் கட்சிகளுக்கு சீட்களை இறுதி செய்யும் வேலையிலும், அவர்கள் கூட்டணியை விட்டுப் போய்விடாமல் தடுக்கும் வேலைகளிலும் திமுக தலைவர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிடமும் ஆலோசனை நடத்த ஆட்களை நியமித்துவிட்டுத் தான் திருச்சிக்குக் கிளம்புகிறார் கருணாநிதி.

மாநாட்டின் இறுதி நாளான்று தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை அறிவிக்கப்பட இருப்பதால், அதுவரை அவர்களுடன் பேச திமுகவுக்கு கால அவகாசம் உள்ளது.

இன்று, நாளை, நாளை மறுதினம் தேவைப்பட்டால் 5ம் தேதி கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சுமூக நிலையை எட்டிவிடலாம் என திமுக நம்பிக்கையுடன் உள்ளது.

மாநாட்டின் கடைசி நாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு பேச ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால், உரிய தொகுதிகளை ஒதுக்காவிட்டால் வைகோ, இடதுசாரிகள் கட்சிகளைச் சேர்ந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு வராமல் கட் அடித்துவிட வாய்ப்புள்ளது.

இது திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தையும், கூட்டணியில் நிலவும் பிரச்சனைகளை ஊரறியச் செய்யவும் வாய்ப்பாக அமைந்துவிடும். இதனால் அந்த பயமே திமுகவை அதிகம் வாட்டுகிறது.

கருணாநிதியை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தேர்தல் ஆயத்த மாநாடு என்பதால் மாபெரும் கூட்டத்தைக் கூட்டி அசத்த திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் திருச்சி திமிலோகப்படவுள்ளது.

தொண்டர்களுக்கு உணவு, நீர், தங்கும் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யவே பல கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. மாநாட்டு மேடையும், பின் புறம் குளு குளு குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேன்கள், கார்கள், லாரி, ரயில், பஸ்களில் தொண்டர்கள் திருச்சியை நோக்கிக் கிளம்ப ஆரம்பித்துவிட்டனர்.

திருச்சி நகர் முழுவதும் திமுக கொடிகளும் தோரணங்களும் வரவேற்பு வளைவுகளுமாக அசத்துகின்றன.

மாநாட்டுத் திடலில் கூட்டணிக் கட்சியினரின் கட்-அவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

அதே போல மாநாட்டில் திமுக முன்னணித் தலைவர்களின் படங்கலை வைத்த மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் துரைமுருகனின் படத்தை மட்டும் வைக்காமல் விட்டுவிட்டார்.

சமீபத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் துரைமுருகன் மோதியதாக வந்த செய்திகளை அடுத்து அவர் படம் மிஸ் ஆனது.

இதை அறிந்த ஸ்டாலின் டென்சனாகி நேருவை நேரில் பார்த்து டோஸ் விட்டார். இதையடுத்தே துரைமுருகனின் படம் வைக்கப்பட்டது.

மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்க மட்டும் ஸ்டாலின் 5 முறை திருச்சிக்கு விசிட் அடித்ததும், மாநாட்டை பிரமாண்டமாக நடத்த நேரில் களத்தில் இறங்கியதும் குறிப்பிடத்தக்கது.

கருணாநிதியும் ஒரு முறை திருச்சி வந்து மாநாட்டு ஏற்பாடுகளை பைன் டியூன் செய்துவிட்டுப் போனார்.

இதன் விளைவாக இதுவரை இல்லாத அளவுக்கு மாநாடு மிக மிகப் பிரமாண்டமாக நடக்கிறது. அத்தோடு இளைஞரணி தொடங்கப்பட்டதன் 25வது ஆண்டு விழாவும் இந்த மாநாட்டில் நடக்கிறது. இதையொட்டி மிகப் பிரமாண்டமான இளைஞரணிப் பேரணியும் நடக்கவுள்ளது.

செண்டிமென்டாகவே திருச்சி மாநாடுகள் திமுகவுக்கு அதிகமான கை கொடுத்து வருபவை.

1949ல் துவக்கப்பட்ட திமுகவை திருச்சியில் 1956ல் நடந்த மாநாட்டில் தான் தேர்தலில் ஈடுபடச் செய்ய அண்ணா தீர்மானம் கொண்டு வந்தார். 1996ல் இங்கு நடந்த மாநாட்டில் பங்கேற்ற பின்னரே கருணாநிதி மீண்டும் முதல்வரானார்.

இப்போதும் அதே மாதிரி செண்டிமென்டாகவே திருச்சி மாநாட்டை திமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.

சென்டிமெண்ட் ஓவர் ஆனதாலோ என்னவோ, மாநாட்டுக்கு பந்தக் கால் அமைக்கும்போது எழும்பிச்சை பழம் வெட்டி, பூஜை எல்லாம் செய்தனர் திமுக முன்னணியினர்.

வாழ்க திராவிடம்...

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X