திமுக மாநாட்டில் வறுபட்ட வைகோ!
திருச்சி:
திருச்சி திமுக மாநாட்டில் இன்று பேசிய பல பேச்சாளர்கள், வைகோவின் விலகலைமறைமுகமாகக் கண்டித்தும், விமர்சித்தும் பேசினர்.
திருச்சியில் திமுகவின் 9 வது மாநில மாநாடு பெருத்த உற்சாகத்துடனும்,சந்தோஷத்துடனும் நேற்று தொடங்கியது. இன்று அந்த சந்தோஷம் சுத்தமாக மறைந்துபோனது. வைகோ போய் விட்டார் என்ற தகவல் திமுகவினர் மத்தியில் மிகவும்கோபத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சக்கணக்கில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள திமுக தொண்டர்களிடையே வழக்கமான உற்சாகம் நிலவினாலும் தலைவர்களின் முகத்தில் அதிர்ச்சியைக் காண முடிந்தது.
![]() |
கருணாநிதியில் ஆரம்பித்து ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி என மேடையில் வீற்றிருந்த தலைவர்கள் அனைவரின் முகத்திலும் கவலைக் கோடுகளை காண முடிந்தது.
இதனால் மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அத்தனைபேரும் ஒருவித ஆதங்கத்துடன் காணப்பட்டனர். குறிப்பாக பேச்சாளர்கள்அனைவரும் வைகோவை கடுமையாக சாடிப் பேச முற்பட்டனர். ஆனால் வைகோகுறித்து யாரும் பேசக் கூடாது என தலைமை தடை போட்டு விட்டது. இதனால்மறைமுகமாக வைகோவை அவர்கள் விமர்சித்தனர்.
புதுவை மாநில முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்பேசினார். அவர் பேசுகையில், என்னைப் போல பலரையும் எப்படி எல்லாமோவளர்த்து ஆளாக்கிப் பார்த்தவர் கலைஞர். ஆனால் இப்போது நடந்துகொண்டிருப்பதை நினைத்தால் நெஞ்சே வெடித்து விடும் போல உள்ளது. அவரால்வளர்க்கப்பட்ட சிலர் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத்தெரியும்.
யார் இருந்தாலும், போனாலும் லட்சோப லட்சம் தம்பிமார்கள் கலைஞருக்குஉறுதுணையாக இருப்பார்கள் என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய பலரும் வைகோவை விமர்சிக்க ஆரம்பிக்க, அவர்களைஅடக்கி வாசிக்கும்படி உடனடியாக உத்தரவு வந்தது. இதையடுத்து மறைமுகமாகவேவைகோவை விமர்சித்தனர்.
மாநாட்டுத் துளிகள்:
அதே நேரத்தில் தொண்டர்கள் தான் திமுகவின் வழக்கமான பலம் என்பதை பறை சாற்றும் வகையில் இந்த மாநில மாநாட்டையொட்டி திருச்சி மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
எங்கு பார்த்தாலும் திமுக தொண்டர்களின் தலையாக காணப்படுகிறது. திமுக கொடிகள், தோரணள்கள், பேனர்கள், கட் அவுட்கள் என கருஞ்சிவப்புத் தொண்டர்கள் திருச்சியை திக்குமுக்காட வைத்துள்ளனர்.
மாநாட்டுப் பந்தலுக்குள் லட்சக்கணக்கான தொண்டர்கள் அமர்ந்திருக்க, திடலுக்கு வெளியேயும் லட்சக்கணக்கான தொண்டர்கள் அலைமோதியவண்ணம் உள்ளனர்.
தொண்டர்களின் பசி மற்றும் தாகத்தைப் போக்கும் வகையில் மாநாட்டு வளாகத்தில் ஏகப்பட்ட டீக் கடைகள், குளிர்பான கடைகள், சிறு உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, திடலின் ஒரு பகுதியில் புத்தக விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அண்ணா, கருணாநிதி ஆகியோர் எழுதிய புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கும் கூட்டம் அலைமோதியது. இரு தலைவர்களும் எழுதிய திரைப்பட கதை, வசன புத்தகங்களும் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குளிர்வித்த மழை: திருச்சியில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயில் குறைந்து, திடீரெனப் பெய்த மழையால் தொண்டர்கள் குளிர்ந்து போயினர். வெப்பப் புழுக்கத்தில் எப்படித்தான் பந்தலுக்குள் அமரப் போகிறோமோ என்று கவலைப்பட்ட அவர்களின் கவலையைப் போக்கும் வகையில், மழையின் குளுமையை சுகமாக அனுபவித்தனர்.
ஸ்டாலின் பேச்சு ஒரு பக்கம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்க அதையும் மீறி பந்தலுக்குள் வீசிய குளு குளு தென்றலால் மாநாட்டுத் திடலே மயங்கித்தான் போனது.
கருணாநிதியின் விட்!:
பொதுக்குழுக் கூட்டம் தொடங்குவதற்கு முன் கூடத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்களை அரங்கிலிருந்து வெளியேறுமாறு மத்திய அமைச்சர் ராஜா உத்தரவிடும் தொணியில் கூறினர்.
அப்போது குறுக்கிட்ட திமுக தலைவர் கருணாநிதி, யாரும் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எங்களை உள்ளே இருக்க அனுமதியுங்கள் என்ற அர்த்தத்தில்தான் ராஜா அப்படிக் கூறினார் என்றார்.
![]() |
இனி வரமாட்டார் வைகோ:
கூட்டணி மாறப் போகும் வைகோ மாநாட்டுக்கு வர மாட்டார் என்பதால் அவரது படங்கள், அக் கட்சியின் கொடிகளை திமுக தொண்டர்கள் கழற்றி வீசி வருகின்றனர்.
மாநாட்டின் கடைசி நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) வைகோ கலந்து கொள்வதாக இருந்தது.
சோனியா வருகை:
இதற்கிடையே மாநாட்டில் உரையாற்ற நாளை டெல்லியில் இருந்து திருச்சி வருகிறார். கருணாநிதியுடன் அவர் தனியாகவும் பேச்சு நடத்துகிறார்.
வைகோவை மத்திய அரசுக் கூட்டணியில் இருந்தும் கழற்றிவிடும் வேலையை திமுக நாளையே தொடங்கிவிடும் என்று தெரிகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்














Click it and Unblock the Notifications