கட்சி உண்டு; கொடி இல்லை!
சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் அனைத்துக்கட்சிகளுக்கும் கிளை இருந்தாலும் ஒரு கட்சிக் கொடியைக் கூட பார்க்க முடியாததுஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இது தேர்தல் காலம். பொது இடத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஐந்து நிமிடம்அமைதியாக நின்று கொண்டிருந்தால், முதுகில் பிரசாரத்தை எழுதி வைத்துவிடுவார்கள். அந்த அளவுக்கு பிசியான இந்த நேரத்தில், ஒரு கிராமத்தில், அரசியல்கட்சியின் வாசனை கூட விசாமல் பெருத்த அமைதி நிலவுவது ஆச்சரியமானவிஷயம்தான்.சிவகாசி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் விளாம்பட்டி. இந்தக் கிராமத்தில்அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. இங்கு மொத்தம் 4000 பேர்வசிக்கிறார்கள்.
விளாம்பட்டியின் விசேஷம் என்னவென்றால் ஒரு கட்சியின் கொடியையும் இங்குபார்க்க முடியாது. மகாத்மா காந்தியின் சிலை மட்டுமே இங்கே உள்ளது. வேறு எந்தத்தலைவரின் சிலையையும் இங்கே பார்க்க முடியாது.
கட்சிக் கொடிக் கம்பம் வைக்கக் கூடாது என்று ஊர்க் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.அதை இதுவரை யாரும் மீறி நடந்ததில்லையாம். முன்பு ஒருமுறை அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டு சாதிக் கலவரம் வரைஅது போய் விட்டதாம்.
அன்று முதல் கட்சி வாசனையே இங்கு கூடாது என்று ஊர் மக்கள் முடிவு செய்து இந்தகட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றனர். கட்சிக் கொடிகள், ஜாதித்தலைவர்களுக்குத்தான் இங்கு அனுமதி இல்லையே தவிர அத்தனை பேரும்தவறாமல் ஓட்டுப் போட்டு விடுவார்களாம்.
ஆரோக்கியமான விஷயமா இருக்கே..!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications