துபாய் ரியல் எஸ்டேட்! கோல்டன் விசா டூ வரி சலுகை வரை! இந்தியர்களை கவர்வது எது? நிபுணர்கள் கூறுவதென்ன
துபாய்: சர்வதேச அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் ரியல் எஸ்டேட் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பட்டியலில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்து வருகிறார்கள்.. கடந்த சில ஆண்டுகளாகவே பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய நாட்டு முதலீட்டாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்திய பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் துபாயில் பில்லியன் கணக்கில் முதலீடுகளைக் குவித்து வருகின்றனர். இதற்கு என்ன காரணம் தெரியுமா? தற்போதைய சூழல் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இந்திய முதலீட்டாளர்கள் துபாய் சொத்து சந்தையை இந்த அளவுக்கு கைப்பற்றுவதற்கு சில முக்கியக் காரணங்கள் பின்னணியாக இருக்கின்றன.

முதலாவதாக, இந்தியாவில் உள்ள பெருநகரங்களோடு ஒப்பிடும்போது துபாயில் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் குடியிருப்புப் பகுதிகளுக்கான வாடகை வருமானம் சராசரியாக 2 முதல் 3 சதவீதம் வரை மட்டுமே உள்ள நிலையில், துபாயில் இது 6 முதல் 9 சதவீதம் வரை மிக ஆரோக்கியமான லாபத்தைத் தருகிறது.
துபாயில் ரியல் எஸ்டேட் பிசினஸ்
2வதாக, துபாயில் சொத்துக்களை வாங்குவதற்கோ, அதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானத்திற்கோ அல்லது அந்த சொத்தை மறுவிற்பனை செய்யும்போது கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கோ எந்தவிதமான வரியும் விதிக்கப்படுவதில்லை. இந்த வரி இல்லாத சூழல் இந்திய முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஈர்க்கிறது.
3வதாக துபாய் அரசாங்கம் வழங்கும் கோல்டன் விசா திட்டம் இந்தியர்களுக்குப் பெரும் சாதகமாக அமைந்துள்ளது. துபாயில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 10 வருஷத்துக்கான நீண்டகால குடியிருப்பு விசா வழங்கப்படுகிறது.
இந்திய பணக்காரர்கள் - முதலீடு
அதுமட்டுமல்லாமல், ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமான திர்ஹம், அமெரிக்க டாலருக்கு இணையாக நிலையான மதிப்பில் பிணைக்கப்பட்டுள்ளதால், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து தங்களது முதலீட்டைப் பாதுகாத்துக் கொள்ள துபாய் சொத்து சந்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் மாத நிலவரத்தை எடுத்துக் கொண்டால், துபாய் ரியல் எஸ்டேட் சந்தை, அளவுக்கு அதிகமான வளர்ச்சியில் சென்றுள்ளது.. இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் ஆண்டுக்கு சுமார் 85 ஆயிரம் கோடி முதல் 95 ஆயிரம் கோடி ரூபாய் வரை துபாய் குடியிருப்புப் பகுதிகளில் முதலீடு செய்து வந்திருக்கிறார்கள்..
இதனால் புதிய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீரும் அளவிற்கு சந்தை அதன் உச்சத்தில் இருந்து வந்துள்ளது.. இந்தியாவின் மிக முக்கியப் பெரும் பணக்காரர்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்க முதலீட்டாளர்கள் மற்றும் இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட தங்களது முதலீட்டுப் போர்ட்ஃபோலியோவை பன்முகப்படுத்த துபாயை நோக்கிப் படையெடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் கடந்த மார்ச் மாத நிலவரத்திற்கு பிறகு, இப்போதைய ஜூன் மாத நிலவரப்படி துபாய் ரியல் எஸ்டேட் சந்தையிலும், இந்திய முதலீட்டாளர்களின் மனநிலையிலும் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
துபாய் ரியல் எஸ்டேட்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இந்திய முதலீட்டாளர்கள் அமைதி காத்து வருகிறார்களாம்.. அவசரப்பட்டு எந்த விலையாக இருந்தாலும் வாங்குவதை குறைத்து கொண்டு, விலை குறைவாகக் கிடைக்கும் இடங்களை தேடிப் பார்த்து நிதானமாக வாங்கும் போக்கைக் கடைப்பிடிக்க துவங்கியிருப்பதாக தெரிகிறது.
கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து எகிறி வந்த துபாய் சொத்து விலைகள், இப்போதைய காலகட்டத்தில் மாதாந்திர அடிப்படையில் கிட்டத்தட்ட 5 சதவீதம் வரை லேசான சரிவை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முதலீட்டாளர்கள் - 4 சதவீத பதிவு கட்டணம்
அதனால்தான் இந்திய முதலீட்டாளர்களின் இந்த நிதான போக்கைக் கவர, துபாயின் முன்னணி கட்டுமான நிறுவனங்களும் ஏகப்பட்ட அதிரடி சலுகைகளை வழங்க தொடங்கியிருக்கிறார்களாம்.. அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 4 சதவீத பதிவு கட்டணத்தை தள்ளுபடி செய்வது மற்றும் எளிதான தவணை முறைகளை அறிமுகப்படுத்துவது போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இவை அனைத்துமே முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடியதாக உள்ளதாம்.
இதில் இன்னொரு விஷயத்தையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. அதாவது தயாராக இருக்கும் வீடுகளை வாங்குவதை விட, கட்டுமானத்தில் இருக்கும் புதிய திட்டங்களில் முதலீடு செய்யவே இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்களாம்..
சொத்து வாங்க பெஸ்ட் சான்ஸ்
கடந்த மார்ச் மாதத்தில் நிலவிய முதலீட்டுப் போக்கு மாறி, இப்போது ரியல் எஸ்டேட் மார்க்கெட்டிங்கே ஒரு முதிர்ச்சியான & நிதானமான கட்டத்திற்குள் நுழைந்துள்ளதால், முதலீடு செய்ய நினைக்கும் இந்தியர்களுக்கு நல்ல விலைக்கு சொத்துக்களை வாங்க ஒரு சாதகமான வாய்ப்பாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள்..
துபாய் சொத்து சந்தை பற்றிய விலை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு விவரங்கள் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் மாறுபடக்கூடும். எனவே, இந்த தகவல்களை ஒரு பொதுவான வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பெரிய அளவிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட சொத்து மற்றும் சந்தையின் தற்போதைய நிலவரத்தை நேரடியாகச் சரிபார்த்து உறுதி செய்து கொள்வது அவசியம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.,.!!
சர்வதேச முதலீட்டாளர்களின் புகலிடம்
இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் பதற்றங்கள் காரணமாக, துபாய் பங்குச்சந்தையின் ரியல் எஸ்டேட் குறியீடு இந்த ஒரே வாரத்தில் 20 சதவீதம் வரை சரிந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருந்த துபாய் வீட்டு விலைகள், மார்ச் மாதத்தில் 5.9 சதவீதம் வரை குறைந்துள்ளன. இது கடந்த 2020ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட முதல் மாதாந்திர சரிவாகும். இந்த மந்தநிலையை சமாளிப்பதற்காக, துபாயின் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் தற்போது சொத்துக்களின் விலையில் 12 முதல் 15 சதவீதம் வரை அதிரடித் தள்ளுபடிகளை வழங்கி முதலீட்டாளர்களை ஈர்த்து வருகின்றனவாம்.
இருந்தாலும், இந்த விலைக்குறைவு தற்காலிகமானது என்றும், குறைந்த விலையில் சொத்துக்களை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மார்க்கெட்டில் லேசான தொய்வு இருந்தாலும், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் சுமார் 48,000 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 23.4 சதவீதம் கூடுதலான வளர்ச்சியாகும். அதனால் தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும், துபாய் ரியல் எஸ்டேட் சந்தை தனது அடிப்படை பலத்தை இழக்காமல் சர்வதேச முதலீட்டாளர்களின் முக்கியப் புகலிடமாகவே நீடிக்கிறது...!!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications