திமுக மாநாட்டில் நிருபர்கள் மீது வெறி தாக்குதல்
திருச்சி:
திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தவைகோவின் கட் அவுட்டை அகற்றுவதை படம் பிடித்த பத்திரிக்கைபுகைப்படக்காரர்கள் மீது திமுக தொண்டர்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர்.இதில் 10 புகைப்படக்காரர்கள் காயமடைந்தனர்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோ இன்று காலை கூட்டணியிலிருந்துவிலகி அதிக கூட்டணிக்கு மாறி விட்டார். இது திருச்சியில் நடைபெற்று வரும் திமுகமாநில மாநாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.ஜெயலலிதாவை வைகோ சந்தித்த தகவல் கிடைத்ததும், திமுக தொண்டர்கள்திரண்டனர். மாநாட்டு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வைகோவின் கட் அவுட்டைஅகற்றினர். மதிமுக கொடிகள், பேனர்களும் அகற்றப்பட்டன.
இதைப் பார்த்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள்அங்கு விரைந்து சென்று படம் பிடித்தனர். இதைப் பார்த்ததும் திமுகவினர்கொந்தளிப்படைந்தனர்.
எல்லாவற்றிற்கும் இவர்கள்தான் காரணம் என்று ஆவேசமாக கூறியபடிபத்திரிக்கையாளர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
மிகுந்த வெறியோடு நடந்த இந்தத் தாக்குதலில் சிக்கி 10 புகைப்படக்காரர்கள்காயமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் ஓடிச் சென்று மாநாட்டு வளாகத்தில் தற்காலிகமாகஅலுவலகம் அமைத்திருந்த தமிழ் நாளிதழ் ஒன்றில் நுழைந்து தஞ்சமடைந்து உயிர்தப்பினர்.
திமுகவினரின் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர்கே.என்.நேரு அங்கு விரைந்து வந்து தொண்டர்களை விலக்கி விட்டுஅமைதிப்படுத்தினார்.
மாநாட்டு வளாகத்தில் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுபத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications