தமிழகத்தில் திடீர் மழைக்கு 6 பேர் பலி
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் திடீர் மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைதொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கடும் வெப்பம் குறைந்து குளுகுளுவெனமாறியுள்ளது தமிழகம். இந்த திடீர் மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் மிக கனத்த மழையால் பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போலபெருக்கெடுத்து ஓடியது. பெய்தது. இதில் தடாகம் அருகே ஒரு ஜீப் திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இதில் 4 பேர் பலியாகிவிட்டனர்.
டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் ஆண்டனி மற்றும் 4 பேர் கேரளாவில் இருந்து கோவைக்கு நேற்றிரவு ஜீப்பில்திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கன மழை பெய்து கொண்டிருந்தது.
தடாகம் அருகே இவர்கள் ஜீப் வந்தபோது சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.ஜீப்பை வெள்ளம் அடித்துச் சென்றுது. இதையடுத்து அதை ஓட்டிச் சென்ற டிரைவர் கணேசன் வெளியில் குதித்துநீந்து கரையேறிவிட்டார்.
ஆனால், ஜீப்புடன் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஜீப்பைகண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.
அதே போல பொள்ளாச்சியில் மழையால் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த பெண் இறந்தார். அதேபோல ராஜபாளையம் பகுதியில் சாலையில் கிடந்த மின்சார கம்பியை மிதித்த ஹோட்டல் ஊழியர் ஒருவரும் உயிரிழந்தார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்றும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மதுரையில் 12 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்னும் 24 மணி நிேரத்திற்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications