• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வைகோவை இழுத்த கயிறுகள்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக கூட்டணிக்கு மதிமுகவை இழுக்க ஏகப்பட்ட பேர் கயிறுகளாக மாறிகடுமையாக உழைத்துள்ளனர்.

வைகோவை தங்கள் பக்கம் இழுப்பதற்குள் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்பெரும்பாடு பட்டு விட்டனர். எத்தனை வழிகள் இருக்கிறதோ, அத்தனை வழிகளிலும்முயன்று, வைகோவுக்கு வலைவீசி ஒரு வழியாக அவரை இழுத்துள்ளார்கள்.

ஒரு மாதத்திற்கு மன்பு வரை அதிமுக தனித்தே இருந்தது. அதைப் பற்றிக்கவலைப்படாத முதல்வர் ஜெயலலிதா, மக்களுடன் நாங்கள் கூட்டணிஅமைத்துள்ளோம் என்று பெருமிதமாக கூறி வந்தார்.

ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவின் போக்கில் மாற்றம் காணப்பட்டது.கெடச்சதை அள்ளு கொடுக்கிறேன் பில்லு ரேஞ்சுக்கு எல்லா பக்கமும் கட்சிகளுக்கு வலை வீசியது.

திமுக கூட்டணியை உடைத்து சிதறடிக்க அதிமுக தீவிரமாக களம் இறங்கியது.முதலில் பாமகவை இழுக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் அது நடக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் கலகலப்பை ஏற்படுத்தி திண்டிவனம்ராமமூர்த்தியை வெளியே கொண்டு வந்தனர்.

இதையடுத்து மதிமுக பக்கம் பார்வையைத் திருப்பியது அதிமுக. வைகோவை இழுக்கசசிகலாவும் நடராஜனும் தங்களது உறவினரும் மதிமுக அவைத் தலைவருமானஎல்.கணேசனை முதலில் வளைத்தனர்.

எல்.கணேசன் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை முதலில்டச் செய்தனர்.

அடுத்ததாக காளிமுத்து களம் இறக்கப்பட்டார். வைகோவுடன் நேரடியாகபோனிலேயே பேசிய காளிமுத்து பக்குவமாகவும், சென்டிமென்ட்டாகவும் பேசிஅவரது மனதில் அதிமுக கூட்டணிக்கான விதையைத் தூவி விட்டார்.

தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் உதவியும் நாடப்பட்டது. அவரும் வைகோவுடன்பேசினார்.

கடைசியாக வைகோவை, அதிமுகவுக்கு இழுக்க உதவியவர்களில் மிகமுக்கியமானவர் தமிழகத்தின் பழைய நாளிதழின் அதிபர் தானாம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வைகோவிடம் தூது போய்த் தான் வேலையைமுடித்திருக்கிறார். அவரை வைத்தே விஜய்காந்துக்கும் முதலில் அதிமுக வலைவீசியது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி அவசரப்பட்டது ஏன்?

மதிமுகவை இனியும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம், கொடுப்பதை வாங்கிக்கொண்டால் நீடிக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்று திமுக பொதுக்குழுவில்பேசிய அனைவரும் காட்டமாக கூறியதால்தான் 22 தொகுதிகளை மட்டுமே அளிக்கமுடியும் என்று திமுக தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்தார் என்றுகூறப்படுகிறது.

மதிமுகவுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த சர்ச்சைகளுக்குகிட்டத்தட்ட நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அதை வைத்தவர்கருணாநிதி. 22 இடங்கள் தான் தர முடியும், ஏற்பதாக இருந்தால் கூட்டணியில்மதிமுக நீடிப்பதாக அர்த்தம் என்று கருணாநிதி திட்டவட்டமாக கூறியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கருணாநிதியின் பேட்டியின் மூலம், மதிமுக வெளியேறப் போவது கிட்டத்தட்டஉறுதியாகி விட்டது. வைகோவுக்காக மிகவும் பொறுமை காத்து வந்த கருணாநிதிஇவ்வாறு கோபமாகவும், தீர்மானமாகவும் முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம்குறித்து விசாரித்தபோது,

பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அத்தனை பேரும் வைகோவை கடுமையாகசாடியதோடு, இனியும் வைகோவை தாங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்றுகட்டளை கலந்த வேண்டுகோளை கருணாநிதிக்கு வைத்ததுதான் முக்கியக் காரணம்என்று கூறப்படுகிறது.

பொதுக் குழுவில் பேசிய பலரும், உண்மையான மன நிலையுடன் வைகோ,கூட்டணியில்லை. அவருக்கு சீட்தான் முக்கியமாகப் போய் விட்டது. இங்கேஇருப்பது போலக் காட்டிக் கொண்டு அங்கேயும் (அதிமுக) பேசிக் கொண்டுள்ளார்.இது துரோகச் செயல். இதை மன்னிக்க முடியாது.

22 சீட் தருவதாக கூறியும் அதை ஏற்காமல் முரண்டு பிடிப்பது நியாயமற்றது.இப்படிப்பட்டவரை நாம் இனியும் தாங்கிக் கொண்டிருக்க வேண்டுமா தலைவரே?திட்டவட்டமாக முடிவெடுங்கள் என்று கருணாநிதியை வற்புறுத்தினர்.

அதிமுக அணிக்குப் போவது என்று வைகோ முடிவெடுத்து விட்டார். எனவே அவரைசமாதானப்படுத்துவது, கூப்பிட்டுப் பேசுவது எல்லாம் நேரத்தை வீணடிக்கும் செயல்.22 தொகுதிகளுக்கு ஒத்து வந்தால் இருக்கட்டும், இல்லாவிட்டால் போகட்டும் என்றுதீர்மானமாக அனைவரும் பேசியதால் வேறு வழியில்லாமல் 22 தொகுதிகள்தான்என்ற அறிவிப்பை கருணாநிதி வெளியிட நேரிட்டது என்கிறார்கள்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X