போனஸில் கைவைத்த இன்போசிஸ்.. ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3 மாதத்தில் தலைகீழாக மாறிய கதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ், மார்ச் காலாண்டின் முடிவில் ஊழியர்களுக்கு வழங்கும் பர்ஃபார்மன்ஸ் போனஸ் அதானது Variable Pay தொகையை கணிசமாகக் குறைத்துள்ளது.

கடந்த காலாண்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக போனஸ் வழங்கிய இன்போசிஸ் நிறுவனம், வெறும் 3 மாத அளவில் தலைகீழாக போனஸ் பங்கீட்டை குறைத்துள்ளது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மார்ச் காலாண்டில் ஊழியர்களுக்கு சராசரியாக 70 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

infosys IT Infosys Bonus Cut IT Performance Bonus Reduction Infosys Q4 FY26 Variable Pay Decrease Indian IT Employees Shock Q4 FY26 infosys performance bonus cut q4 infosys variable pay reduction 2026 infosys bonus 70 percent it employees bonus shock infosys infosys q4 fy26 bonus payout previous quarter 85 percent bonus infosys generative ai impact it bonus infosys pl band payout matrix indian it salary concerns infosys vs tcs bonus comparison infosys employee disappointment bonus payout decrease infosys it sector cost optimization india infosys march quarter results variable pay moderation infosys 70 q4 fy26 85 pl vs tcs

கடந்த காலாண்டுடன் ஒப்பீடு

டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 85 சதவீதம் போனஸ் வழங்கியிருந்தது. இது கோவிட் காலத்துக்குப் பிறகு நிறுவனம் வழங்கிய அதிகப்படியான போனஸ் அளவீடாகும். ஆனால் இதை தொடர்ந்து வந்த மார்ச் காலாண்டில் அதாவது வெறும் 3 மாத இடைவெளியில் இந்த போனஸ் அளவு 70 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பல ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் உள் மதிப்பீட்டு அமைப்பான Personal Level (PL) அடிப்படையில் போனஸை வழங்குகிறது. PL லெவல் என்பது ஒரு ஊழியரின் பணி அனுபவம் மற்றும் சம்பளம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மார்ச் காலாண்டில்

  • PL4 ஊழியர்களுக்கு 67 முதல் 82 சதவீதம் வரையிலான போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது.
  • PL5 ஊழியர்களுக்கு 65 முதல் 78 சதவீதம் வரையிலான போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது.
  • PL6 ஊழியர்களுக்கு 63 முதல் 77 சதவீதம் வரையிலான போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த போனஸ் தொகை நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவுகள் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப தொகை அளவு மாறுபடுவதாகவும் இன்போசிஸ் உள் நிர்வாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக ஒரு அமெரிக்க நிறுவன திட்டத்தில் பணியாற்றும் PL4 ஊழியர்களுக்கு சராசரியாக 80 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டால், இந்திய திட்டத்தில் பணியாற்றும் PL4 ஊழியர்களுக்கு 67 சதவீத போனஸ் வழங்கப்படலாம். இது ஒவ்வொரு திட்டத்தின் லாப அளவீடுகள், செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

ஏன் இந்தக் குறைப்பு?

உலக ஐடி சந்தையில் செயற்கை நுண்ணறிவு (Generative AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பாரம்பரிய சேவைகளுக்கான தேவை குறைந்து வருவதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். இதனால் உலகளாவிய ஐடி சேவை நிறுவன பங்குகள் அண்மையில் பெரும் ஏற்ற இறக்கத்தை சந்தித்தன. இந்தச் சூழலில் இன்போசிஸ் தனது நிதி நிலையை பலப்படுத்தும் வகையில் போனஸ் செலவைக் குறைத்துள்ளதாக தொழில் வட்டாரங்கள் கருதுகின்றன.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஏற்கெனவே சம்பள உயர்வு அறிவித்துள்ள நிலையில், இன்போசிஸ் உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இன்னும் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், சிலரிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்போசிஸ் ஊழியர்களுக்கு இந்தக் காலாண்டு போனஸ் குறைப்பு கணிசமான வருமான இழப்பை ஏற்படுத்தும். குறிப்பாக நடுத்தர மற்றும் இளநிலை ஊழியர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நிறுவனம் தனது நிதி நிலையையும், லாப அளவீட்டையும் வலுப்படுத்தும் வகையில் எடுத்துள்ள இந்த நடவடிக்கை, அடுத்த காலாண்டுகளில் ஊழியர்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்திய ஐடி துறையில் தொடர்ந்து மாறிவரும் சம்பள அமைப்பு மற்றும் போனஸ் கொள்கைகள், ஊழியர்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+