பணிந்தது திமுக: இ.கம்யூவுடன் சமரசம்
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.கூடுதல் தொகுதிகளுக்குப் பதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்கும் 10தொகுதிகளையும் மறுபேச்சின்றி தர திமுக ஒத்துக் கொண்டுள்ளது.
இதையடுத்து தொகுதிப் பங்கீடு பிரச்சினை முடிந்து விட்டதாகவும் அதிமுக ஆட்சியைஅகற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக இந்திய கம்யூனிஸ்ட்தீவிரமாக பாடுபடும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்தெரிவித்துள்ளார்.இந்த சமரசம் மூலம், இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணியை விட்டு வெளியேறி விடும்என்ற சிலரின் எதிர்பார்ப்பில் டன் கணக்கில் மண் விழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் அக்கட்சி பெரும்அதிருப்தி அடைந்தது. கூடுதல் தொகுதிகள் ஒதுக்கக் கோரி திமுகவை வலியுறுத்தவேண்டும் என தா.பாண்டியன் கூறினார். கொடுக்காவிட்டால் அதிமுக கூட்டணிக்குப்போகலாம் என்றார் (சசிகலாவும் தா.பாவும் ஒரே சமூகத்தினர். இதனால் அவரை சசிமூலம் வளைக்க ஜெ முயன்றார்)
ஆனால் திமுகவுடன் சமரசமாக போய் விடலாம், அதுதான் கூட்டணி ஒற்றுமைக்குநல்லது என்று நல்லகண்ணு உள்ளிட்ட தலைவர்கள் எடுத்துக் கூறினர்.
இதைத் தொடர்ந்து நாங்கள் கேட்கும், எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 10தொகுதிகளைத் தர வேண்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர வேண்டும் என்று திமுகவைநிர்பந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.
நேற்று கருணாநிதியை சந்தித்து இந்தக் கோரிக்கையை இந்திய கம்யூனிஸ்ட்தலைவர்கள் வலியுறுத்த, அதை கருணாநிதியும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்துதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே நிலவிய கருத்து வேறுபாடு முடிவுக்குவந்தது.
இந் நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார் தா. பாண்டியன்.அப்போது அவர் கூறுகையில், 10 தொகுதிகள் தொடர்பாக நிலவி வந்த பூசலுக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. அது முடிந்து போன கதை. இடதுசாரிக்கட்சிகளுக்கு கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாக தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . இதில்எங்களுக்கு திருப்திதான்.
10 தொகுதிகள் என்பதை மறுபரிசீலனை செய்யும் முடிவை நாங்கள் விரும்பவில்லை.தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின்னர் வேட்பாளர் தேர்வை மேற்கொள்வோம். தற்போதுதேர்தல் வேலைகளில் நாங்கள் இறங்கி விட்டோம். ஜனநாயக முற்போக்குக்கூட்டணியின் வெற்றிக்காக தீவிரமாக பாடுபடப் போகிறோம். ஆணவம் பிடித்தஅதிமுக ஆட்சியை அகற்ற ஒற்றுமையாக செயல்படப் போகிறோம்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. காவல்துறைஉள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. வெள்ள நிவாரணம்வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன.
வரும் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் உறுதி என்றார் தா.பாண்டியன்.
இதன்மூலம் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளுக்குமுற்றுப்புள்ளி வைத்துள்ளார் தா.பாண்டியன்.
அம்பாசமுத்திரம், நான்குநேரி, மானாமதுரை, திருப்பூர், பெருந்துறை, நன்னிலம்,அரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பொன்னேரி ஆகிய 10 தொகுதிகளைஇந்திய கம்யூனிஸ்ட் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த 10 தொகுதிகளும் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓரளவு பலமுடன்உள்ள தொகுதிகள் ஆகும்.
முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த தா.பாண்டியனை சசிகலா மூலம் வளைக்க முதல்வர்ஜெயலலிதா கடுமையாக முயன்றது குறிப்பிடத்தக்கது.
இருக்குமா இ.கம்யூ?-இன்று முக்கிய ஆலோசனை
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications