அதிமுக கூட்டணியில் தொடரும் தொகுதி சிக்கல்
சென்னை:
மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் அதிமுககூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
இந்தக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் கடந்த ஒரு வார காலமாகவேமுடிவெடுக்க முடியாத அளவுக்கு கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.இதுவரை 5 சுற்று பேச்சவார்த்தை நடத்தியும் மதிமுகவும், திருமாவும் அதிமுக தரும்தொகுதிகளை ஏற்கத் தயாராக இல்லை என்று கூறிவிட்டனர்.
இந் நிலையில் திருமாவளவனை கடந்த இரு நாட்களாக அதிமுக தேர்தல் குழு பேசவரச் சொல்லி அழைத்தும் அவர் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் கட்சிப் பணியில் பிஸியாக இருப்பதாகச் சொல்லிவிட்டு வெளியூர்போய்விட்டார் திருமா.
அதே போல மதிமுக கேட்கும் தொகுதிகளை தருவதிலும் அதிமுக ரொம்பவேயோசிக்கிறது. இதனால் அக் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கல்உருவாகியுள்ளது.
மேலும் தங்களை நெருக்க வைகோவும் திருமாவும் கூட்டணிக்குள் ஒரு தனிஅணியாக செயல்பட்டு வருவதாகவும் அதிமுக கோபத்தில் உள்ளது.
ஆனாலும் எதையும் வெளிக்காட்ட இயலாத நிலையில் இரு கட்சிகளுடனும் பேசிவருகிறது.
மதிமுக கேட்கும் தொகுதிகளில் 30 தொகுதிகளைத் தர அதிமுக தயாராக இல்லை.கேட்டதில் 5 மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் சிக்கல் பெரிதாகிவிட்டதால்,தமிழக தொகுதிகளை விட்டுவிட்டு முதலில் பாண்டிச்சேரி தொகுதிகளை ஒதுக்குவதுகுறித்து மதிமுகவிடம் அதிமுக பேசி வருகிறது.
இங்கு 2 தொகுதிகளில் மட்டுமே மதிமுக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தைகளுடன் இறுதிக் கட்ட ஆலோசனையில்அதிமுக ஈடுபடவுள்ளது. அப்போது திருமா கேட்கும் தொகுதிகளை விட்டுத் தந்துதொகுதிப் பட்டியலை அதிமுக இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications