சேலத்தில் 50 கோழிகள் மர்ம சாவு:பறவை காய்ச்சல் காரணமில்லை என்கிறது அரசு!

Subscribe to Oneindia Tamil

சேலம்

சேலம் மணக்காடு பகுதில் திடீரென 50க்கும் மேற்பட்ட கோழிகள் அடுத்தடுத்துஇறந்ததால், அங்கு பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலுக்கு ஏராளமான கோழிகள்செத்து மடிந்துள்ளன. மேலும் அங்கு மறுபடியும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.இதனால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவி வரும் நிலையில், சேலம் அருகேமணக்காடு என்ற இடத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன.

மணக்காடு தெற்கு பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை, தனம் ஆகியோர் ஏராளமானகோழிகளை வளர்த்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல கோழிகளைகூண்டிலிருந்து திறந்து மேய விட்டனர். அருகில் உள்ள குப்பை மேட்டுக்குப் போனகோழிகள் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென கோழிகள் செத்துவிழுந்தன. 15 கோழிகள் அடுத்ததடுத்து இறந்ததால் தனம், செல்லத்துரைபீதியடைந்தனர்.

அதேசமயத்தில் அவருக்கு அருகில் வசித்து வரும் தனப்பாக்கியம் என்பவரின்கோழிகளும் இறந்து விழுந்தன. இப்படியாக கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டகோழிகள் இறந்ததால் அப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டது.

தகவல் பரவியதும் கால்நடைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அங்கு விரைந்துவந்தனர். இறக்கும் நிலையில் இருந்த கோழிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளித்தனர்.இறந்து, மண்ணில் புதைக்கப்பட்ட கோழிகளை பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனர்.

பறவைக் காய்ச்சல் இல்லை: இதற்கிடையே சேலத்தில் கோழிகள் இறந்ததற்குபறவைக் காய்ச்சல் காரணம் இல்லை என்று தமிழக அரசின் கால்நடைத்துறைஇயக்குனர் பழனிவேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலம் அஸ்தம்பட்டி அருகேமணக்காடு பகுதியில், கோழிகளும், குஞ்சுகளும் மர்மமாக இறந்ததாக வெளியானதகவல் கிடைத்ததும், சேலம் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர்டாக்டர் அருணாச்சலம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விரைந்து சென்றுபரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த கோழிகள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் இல்லை. மாறாக, விஷம்கலந்த தீவனத்தை சாப்பிட்டதுதான் கோழிகள் இறந்ததற்கு முக்கியக் காரணம் எனத்தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் பீதியடையவோ, பயமோ அடையவேண்டாம் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+