தோழமை கட்சிக்கு தோற்கும் தொகுதி தரும் ஜெ
சென்னை:
அதிமுகவில் தொகுதிகள் ஒதுக்கீடு எப்படி நடக்கிறது என்பது குறித்து திமுக தலைவர்கருணாநிதி தனக்கே உரிய பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக முரசொலியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில்:அதிமுக அணியில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.அதாவது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அனைத்தையும் அதிமுகவே எடுத்துக்கொள்கிறது. வெற்றி வாய்ப்பில்லாத, வெற்றி பெறவே வழி இல்லாத தொகுதிகளைதோழமைக் கட்சிகள் என்ற பெயரில் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ள கட்சிகளுக்குஒதுக்கி வருகிறார்கள்.
தோல்வி அடையப் போகும் தொகுதிகளை யாருக்காவது ஒதுக்க வேண்டுமேஎன்பதற்காகவே ஏகப்பட்ட கட்சிகளை தோழமைக் கட்சிகள் என்ற பெயரில் சேர்த்துக்கொண்டு அணி அமைத்துள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது.
ஆனால், திமுக அணியில் அப்படி இல்லை. தோழமைக் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புள்ள இடங்களின் பட்டியலை கேட்டுப் பெற்று, மற்றவர்கள் அந்தத்தொகுதிகளை கேட்கிறார்களா என்பதைப் பார்த்து, பிரச்சினை இல்லாத வகையில்,சுமூகமாக, திருப்தி ஏற்படும் வகையில் தொகுதிகளை ஒதுக்கி வருகிறோம்.
முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அமைச்சரவையில் இடம் தராதவர்ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதாவை, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த சிலர்சந்தித்து ஆதரவு தரப் போவதாக கூறுகிறார்கள்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்பதற்கேற்ப இது இருக்கிறதுஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
அமைச்சர் தளவாய் சுந்தரம் மீது பெண் டாக்டர் கோமதி சுமத்திய பாலியல்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நீதிபதி மருதமுத்து கமிஷன் தெரிவித்துள்ளதேஎன்ற மற்றொரு கேள்விக்கு, வேலிக்கு ஓணான் சாட்சி என்று பதில் கூறியுள்ளார்கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications