நீதிமன்ற வளாகங்களில் அரசியலுக்கு தடை!
சென்னை:
தமிழகத்தில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் அரசியல் தொடர்பான எந்தநிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக பொதுநலன் மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.அதில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகஅளவில் நடைபெறுகின்றன. அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள்,கட்சிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் தொடர்பானஆலோசனைக் கூட்டங்கள் என அரசியல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதுதவிர அரசியல் நிகழ்ச்சிகள் குறித்த சுவரொட்டிகள், தட்டிகள், பேனர்களும் அதிகஅளவில் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்படுகின்றன.
இதனால் உயர்நீதிமன்றத்தின் புனிதம், தனித்தன்மை கெடுகிறது. மக்களும் அதிருப்திஅடைகின்றனர். எனவே இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவா ஆகியோர் இந்த மனுவைவிசாரித்தனர்.
பின்னர், உயர்நீதிமன்ற வளாகத்தில் அரசியல் தொடர்பான எந்த நடவடிக்கைகளையும்மேற்கொள்ள நீதிபதிகள் தடை விதித்தனர். உயர்நீதிமன்றம் தவிர மதுரைஉயர்நீதிமன்றக் கிளை, பிற நீதிமன்றங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்தத் தடை உத்தரவு முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கசம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் பதிவாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications