For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசின் விதிமீறல்: டாண்டனிடம் திமுக கடும் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது சேர்க்கப்பட்ட தாற்காலிகஊழியர்களிலிருந்து தேர்தல் பணிக்கு ஊழியர்களைத் தேர்வு செய்ய தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு தேர்தல் ஆணையத்திடமும் புகார்கொடுத்துள்ளது.

தேர்தல் பணிகளுக்காக தற்காலிக ஊழியர்களை தேர்வு செய்யப் போவதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. 2003ம் ஆண்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போதுவேலைக்கு எடுக்கப்பட்ட தாற்காலிக ஊழியர்களில் இருந்த ஊழியர்களைத் தேர்வுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டனுக்கு திமுகஅனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில்,

தேர்தல் விதிகளை தமிழக அரசு சுத்தமாக தூக்கிப் போட்டு விட்டது. அதை மதிக்கவேஇல்லை. ஆளுங்கட்சியின் தூண்டுதலின்பேரில் தமிழக அரசு அதிகாரிகளும்விதிகளை மீறி செயல்பட்டு வருகிறார்கள்.

தமிழக அரசின் வருவாய்த்துறை மார்ச் 17ம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி,தேர்தல் பணிக்கு தற்காலிக ஊழியர்களை தேர்ந்தெடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியாகஉள்ளது.

இந்த ஊழியர்களில் பெரும்பாலானவர்களை, கடந்த 2003ம் ஆண்டு, அரசு ஊழியர்வேலைநிறுத்தத்தின்போது சேர்க்கப்பட்ட தாற்காலிக ஊழியர்களிலிருந்து எடுத்துக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

அந்த தாற்காலிக ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் அதிகவினர். யாரும்முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதிமுகவினர் பரிந்துரை செய்தவர்கள் தான்தேர்வாயினர்.

அந்த தற்காலிக ஊழியர்கள் தேர்தல் பணிகளில் நியமிக்கப்பட்டால் அது பல்வேறுமுறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.

தேர்தல் பணிகளுக்கு ஊழியர்கள் போதாவிட்டால், மத்திய அரசு ஊழியர்களைதேர்தல் பணியில் அமர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும்விதி மீறல்களுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் விழாவில்..

இந் நிலையில் திண்டிவனம் கோனேரிகுப்பத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் வன்னிய சங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. அதில் திமுகதலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது:

நான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று இங்கு பேசியவர்கள் கூறினார்கள். நான் நாட்டை 4 முறை ஆண்டவன். நாங்கள் அகம்பாத்தோடு, ஆணவத்தோடுபதவிக்கு வர மாட்டோம். அடக்கத்தோடு தான் வருவோம்.

இந்த விழாவுக்குத் தடை விதிக்க அதிகாரிகள் ஏதோ சலசலப்பு காட்டியதாகக் கேள்விப்பட்டேன். திமுகவும் பாமகவும் பனங்காட்டு நரிகள். எந்தசலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம்.

விதிமுறை, சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம். இதை கோழைத்தனம் என நினைத்துவிடக் கூடாது. வீரனுக்கு நாகரீகமாகவும் நடக்கத் தெரியும்என்பதைக் காட்டத்தான் இந்த மாநாடு.

ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இன்னும், இன்னும், இன்னும் உயர வேண்டும், இந்த முன்னேற்றம் போதாது என்றார் கருணாநிதி.

ராமதாஸ் பேசுகையில், முதல்வரான மறுநாளே கருணாநிதி எங்களைக் கூப்பிட்டு இட ஒதுக்கீடு தந்தார். அதை நான் என்றும் மறக்க மாட்டேன். என்சமுதாயம் அதற்காக என்றும் நன்றி சொல்லும். 2 மாதத்தில் கருணாநிதி மீண்டும் முதல்வராவார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்னென்றும்உதவுவார் என்றார்.

மீண்டும் திமுக நேர்காணல் தொடக்கம்:

இதற்கிடையே திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுள்ளவர்களிடம் இன்று முதல் மீண்டும் நேர்காணல் தொடங்கியுள்ளது.

சில நாட்கள் நடந்த இந்த நேர்காணல் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு காண்பதில் கருணாநிதி பிஸி ஆனதால் நிறுத்தப்பட்டது.

இன்று மீண்டும் தொடங்கியுள்ள நேர்காணல் 24ம் தேதி வரை நடக்கிறது.

காங்கிரஸ் தவிர கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டதால், திமுக போட்டியிடும் தொகுதிகளும் உறுதியாகிவிட்டன.

எனவே திமுக போட்டியிடும் தொகுதிகளில் விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டுமே தற்போது நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நேர்காணலில், விழுப்புரம், நாகப்பட்டனம், கடலூர் மாவட்ட திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மாவட்டச்செயலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

கருணாநிதி தவிர அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன், சற்குணபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.

திமுக பேச்சாளர்கள் கூட்டம்:

இதற்கிடையே திமுக பேச்சாளர்களின் கூட்டம் கருணாநிதி தலைமையில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.

இக் கூட்டத்தில், பிரசாரக் கூட்டங்களில் எந்தக் கருத்தை முன்வைத்துப் பேச வேண்டும் என்பது குறித்து பேச்சாளர்களுடன் கருணாநிதி கலந்துரையாடவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X