பறவை காய்ச்சல் பீதி-நஷ்டம் ரூ.7000 கோடி!
சென்னை:
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக இதுவரை ரூ. 7,000 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக இதுவரை நாடு முழுவதும் ரூ. 7,000 கோடிஅளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தினசரி ரூ. 200 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது.
பறவைக் காய்ச்சல் இந்தியாவில் இருப்பது குறித்து முழுமையான விசாரணை ஒன்றைமத்திய அரசு விரைவில் மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பான ழுமையான, விரிவான, தெளிவான தகவல்களை அது வெளியிட்டுமக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மேலும் ஒருஆய்வகத்தை உடனடியாக நிறுவ வேண்டும். மத்திய அரசு விரைந்து செயல்பட்டால்மட்டுமே கோழிப் பண்ணையாளர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
இவ்வாறு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications