• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சேப்பாக்கத்தில் கருணாநிதி மீண்டும் போட்டி

By Staff
|

சென்னை:

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 129 தொகுதிகளில்திமுக போட்டியிடுகிறது. இதில் வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்கின் தலைவர்கதிரவன் உசிலம்பட்டியிலும், புதிய பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்திஅரக்கோணத்திலும் திமுக சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இதைத் தவிர மேலும் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்நாடு மாநிலஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடுகிறது.

இதனால் திமுக சார்பில் போட்டியிடுவோர் அதிகாரப்பூர்வமாக 132 பேர். இதில்சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியும் ஆயிரம்விளக்கில் ஸ்டாலினும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர்கள் விவரம்:

அதன் விவரம்:

சேப்பாக்கம்- கருணாநிதி

துறைமுகம்- அன்பழகன்

காட்பாடி- துரைமுருகன்

விழுப்புரம்: பொன்முடி

ராயபுரம்- சற்குண பாண்டியன்

ஆயிரம் விளக்கு- ஸ்டாலின்

எழும்பூர்- பரிதி இளம்வழுதி

அண்ணாநகர்- ஆற்காடு வீராசாமி

கும்பகோணம்- கோ.சி.மணி

சேலம் 2- வீரபாண்டி ஆறுமுகம்

திருச்சி 2 - கே.என்.நேரு

மதுரை மத்தி- பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்

திருவல்லிக்கேணி- மு.நாகநாதன்

நாகர்கோவில்- ராஜன்

பத்மநாபபுரம்- தியோடர் ரெஜினால்ட்

விளாத்திகுளம்- ராஜாராம்

ஒட்டப்பிடாரம் (தனி)- ராஜமன்னார்

சங்கரன்கோவில் (தனி)- தங்கவேலு

தென்காசி- கருப்பசாமி பாண்டியன்

ஆலங்குளம்- பூங்கோதை ஆலடி அருணா

திருநெல்வேலி- மலைராஜா

அம்பாசமுத்திரம்- ஆவுடையப்பன்

திருச்செந்தூர்- ஜெயசீலன்

தூத்துக்குடி- கீதா ஜீவன்

ராதாபுரம்- அப்பாவு

கடலாடி-சுப. தங்கவேலன்

முதுகுளத்தூர்- முருகவேல்

திருப்பத்தூர் (சிவகங்கை) - பெரிய கருப்பன்

இளையான்குடி- ராஜ கண்ணப்பன்

மைலாப்பூர்- நெப்போலியன்

கன்னியாகுமரி- சுரேஷ் ராஜன்

அருப்புக்கோட்டை- தங்கம் தென்னரசு

சாத்தூர்- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சிவகாசி- தங்கராஜ்

இராஜபாளையம் (தனி): வி.பி.ராஜன்

பழனி (தனி): அன்பழகன்

ஒட்டன்சத்திரம்: அர.சக்கரபாணி

ஆத்தூர்- பெரியசாமி

நத்தம்- எம்.ஏ.ஆண்டி அம்பலம்

பெரியகுளம்: எல்.மூக்கையா

ஆண்டிப்பட்டி: பா.சீமான்

போடிநாயக்கனூர்: லட்சுமணன்

கம்பம்: பெ.செல்வேந்திரன்

சேடப்பட்டி- கோ.தளபதி

திருமங்கலம்: வேலுசாமி

உசிலம்பட்டி: கதிரவன் (வல்லரசு பிரிவு பார்வர்ட் பிளாக்)

சோழவந்தான்: மூர்த்தி

சமயநல்லூர் (தனி)- தமிழரசி ரவிகுமார்

புதுக்கோட்டை- ஜாபர் அலி

கொளத்தூர் (தனி)- பரஞ்சோதி

அறந்தாங்கி-உதயம் சண்முகம்

மருங்காபுரி- ரொஹைகயா மாலிக் (என்ற) சல்மா

உப்பிலியபுரம் (தனி)- ராணி

முசிறி- என்.செல்வராஜ்

அரவக்குறிச்சி- கலீலூர் ரஹ்மான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-காதர் மொய்தீன் பிரிவு)

பெரம்பலூர் (தனி)- ராஜ்குமார்

ஆண்டிமடம்-.சிவசங்கர்

சீர்காழி (தனி)- பன்னீர் செல்வம்

குத்தாலம்- அன்பழகன்

வேதாரண்யம்- வேதரத்தினம்

திருவாரூர் (தனி)- மதிவாணன்

லால்குடி- செளந்திரபாண்டியன்

திருவெறும்பூர்- சேகரன்

திருச்சி 1- அன்பில் பெரியசாமி

கரூர்- வாசுகி முருகேசன்

கிருஷ்ணராயபுரம் (தனி)- காமராஜ்

குளித்தலை- மாணிக்கம்

பூங்கா நகர்- ரகுமான் கான்

கோவை கிழக்கு- பொங்கலூர் பழனிச்சாமி

புரசைவாக்கம்- பாபு

தி.நகர்-ஜெ.அன்பழகன்

பொன்னேரி (தனி)- அன்புவாணன்

திருவொற்றியூர்- சாமி

வில்லிவாக்கம்- ரெங்கநாதன்

திருவள்ளூர்- சிவாஜி

ஆலந்தூர்- அன்பரசன்

தாம்பரம்- ராஜா

உத்திரமேரூர்- சுந்தர்

அச்சரப்பாக்கம்(தனி)- சங்கரி நாராயணன்

அரக்கோணம்(தனி)- பூவை ஜெகன்(புதிய பாரதம் கட்சி)

வாணியம்பாடி- அப்துல் பாசித்(தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம்லீக்)

ராணிப்பேட்டை- காந்தி

பேரணாம்பட்டு (தனி)- சின்னசாமி

நாட்ராம்பள்ளி- சூரியகுமார்

தண்டராம்பட்டு- வேலு

திருவண்ணாமலை- பிச்சாண்டி

ஆரணி- சிவானந்தம்

வந்தவாசி (தனி)- ஜெயராமன்

செஞ்சி- கண்ணன்

கண்டமங்கலம் (தனி)- புஷ்பராஜ்

திருநாவலூர்- வீரபாண்டியன்

சின்ன சேலம்- உதயசூரியன்

சங்கராபுரம்- அங்கயற்கன்னி

உளுந்தூர்பேட்டை (தனி)- திருநாவுகரசு

நெல்லிக்குப்பம்- சபா.இராஜேந்திரன்

கடலூர்- ஐயப்பன்

குறிஞ்சிப்பாடி- பன்னீர் செல்வம்

மங்களூர் (தனி)- வெ.கணேசன்

தஞ்சாவூர்- உபைதுல்லா

திருவையாறு- சந்திரசேகரன்

வலங்கைமான் (தனி)- செந்தமிழ்செல்வன்

ஒரத்தநாடு- இராசமாணிக்கம்

கிருஷ்ணகிரி- செங்குட்டுவன்

பர்கூர்- வெற்றிசெல்வன்

தர்மபுரி- பெரியண்ணன்

மொரப்பூர்- முல்லைவேந்தன்

வீரபாண்டி- இராஜேந்திரன்

பனமரத்துப்பட்டி- இராஜேந்திரன்

சங்ககிரி (தனி)- துரைசாமி

ஏற்காடு (தனி)- தமிழ்செல்வன்

தலைவாசல் (தனி)- சின்னதுரை

ராசிபுரம்- இராமசாமி

சேந்தமங்கலம் (தனி)- பொன்னுசாமி

திருச்செங்கோடு- காந்திசெல்வன்

வெள்ளக்கோவில்- சாமிநாதன்

ஈரோடு- ராஜா

.அந்தியூர் (தனி)- குருசாமி

தாராபுரம் (தனி)- பிரபாவதி

பவானிசாகர்- கீதா நடராசன்

சத்தியமங்கலம்- தர்மலிங்கம்

மேட்டுப்பாளையம்- பா.அருண்குமார்

பேரூர்- ருக்மணி

கிணத்துக்கடவு- நெகமம் கந்தசாமி

பொள்ளாச்சி- சாந்தி தேவி

.உடுமலைப்பேட்டை- வேலுசாமி

பொங்கலூர்- மணி

பல்லடம்- பொன்முடி

குன்னூர் (தனி)- செளந்திரபாண்டியன்

கூடலூர்- இராமசந்திரன்

இதில் வாணியம்பாடி, அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள்இருவரும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-காதர் மொய்தீன்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இந்தக் கட்சிக்கு பாளையங்கோட்டை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்தொகுதியில் வேட்பாளரை அக் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தவேட்பாளர் நாளை (31, மார்ச்) அறிவிக்கப்படுகிறார்.

இந்த மூவருமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் அதிகாரப்பூர்வமாகதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படுவர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X